முத்தமிழ்க் கவியின் சிந்தனையில் திருலேங்கடம் 总磁罗 என்று கூறுவர். "எல்லா உலகங்களும் வணங்குகின்ற, இரண்டு திருவடித் தாமரைகளையும், வண்டுகள் மொய்க் கின்ற திருத்துழாய் மாலையையும்கொண்டு பூமிப்பிராட் டியார் பெரிய பிராட்டியார் ஆகிய இருவர்களுடனும் தங் கியிருக்கும் மலையாதெனில்: அழகு தவழுகின்ற காதணி களை எட்டுகின்ற குவளை மலர் போன் கண்களையும் இளமையையும் உடைய குறமகளிர் தம் சிவந்த விரல்களி னால் கவண்கற்களை விளையாட்டாக எடுத்தெறியலே, நவமணம் கமழும் கற்பக மலர்கள் உதிர்ந்து விழிப்பெற்று அழகுமிக்க சேடகிரி (பாம்பு மலை)யேயாகும்’ என்கின் றார். வைணவத்தில் திருமலையைத் திருமலையாழ்வார் என்று வழங்குவர். எம்பெருமானின் உடலாகத் திகழும் அசித்தும் வழி படுவதற்கு உரியது என்ற கொள்கையையுடையவர்கள் ஆழ்வார் பெருமக்கள் என்பதனை நாம் அறிவோம். மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை பதியது ஏத்தி எழுவது பயனே. --திருவாய் 2-10:3 என்றும், பரன், சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே. -திருவாய். 3-3:3 என்றும் வரும் நம்மாழ்வார் திருவாக்குகளைக் காண்க. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் முத்தமிழ்க் கவிஞரும் திருமலையின் பெருமையினை ஆங்காங்குக் கூறிச் செல்வர். திருவேங்கடத்து அப்பனின் சீர்மை: வேங்கடத் தின் பெருமையை எடுத்தோதிய ஆசிரியர் அம்மலையில்
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/271
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
