16. கம்பன் கருத்தில் திருவேங்கடம்" ஒரு பெருங்காப்பியத்தில் மலை கடல் நாடு வளநகர் பருவம் முதலிய பல பொருள்கள்பற்றி ஆங்காங்குச் சுட் டிச் செல்லுதல் காப்பிய மரபாக இருந்து வருவதை நாம் அறிவோம். இக்கால ஆராய்ச்சி முறையில் நோக்கினால் கவிஞன் புவி இயல் பற்றிய குறிப்புகளைத் தருகின்றான் என்று சொல்ல வேண்டும். கிட்கிந்தா காண்டத்தில் நாட விட்ட படலத்தில் இத்தகைய குறிப்புகளைக் காண்கி தோம். இராமபிரானது கட்டளைப்படி சுக்கிரீவன் சீதாப்பிராட்டியைத் தேடும்படி நாற்றிசையிலும் திசைக்கு இரண்டு வெள்ளம் சேனையுடன் வானரப் படைத் தலைவர்களை அனுப்புகின்றான். மேற்குத் திசை யில் இடபனும், வடதிசையில் சதவலியும், கிழக்குத் திக்கில் விணதனும், தென்திசையில் அங்கதனும் செல்லுகின்றனர். அங்கதனுடன் அநுமன் சாம்பவான் முதலிய முக்கிய வீரர்களும் செல்லுகின்றனர். பலர் மூலம் அறிந்த செய்திகளால் சீதாப்பிராட்டி தென்திசையில்தான் இருக்க வேண்டும் என்ற ஐயம் ஏற்படு கின்றது சுக்கிரிவனுக்கு. தென்திசையில் செல்லுபவர்கட்கு விந்திய மலை, நருமதை நதி, ஏமகூடமலை, பெண்ணை யாறு, விதர்ப்ப நாடு, தண்டகவனம், முண்டகத்துறை, சப்தகிரி (அக்டோபர்-1991) இதழில் வெளிவந்தது.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/280
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
