பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證發藝 வடவேங்கடமும் திருவேங்கடமும் வாசமாமலர் தாறு வார்பொழில் சூழ்தரும் உலகுக் கெல்லாம் தேசமாய்த் திகழும் மறைத்திரு வேங்க டம் அடை நெஞ்சமே -பெரி. திரு. 1.8.9 என்று திருமங்கையாழ்வாரால் சிறப்பிக்கப்பெற்ற அம் மலையை அடைகின்றனர் வானர வீரர்கள். ஆய குன்றினை எய்தி அருந்தவம் மேய செல்வரை மேவினர் மெய்ந்நெறி நாய கன்தனை நாளும் வணங்கிய ஆா நற்றவர் பாதங்கள் சூடினார் - ஆறுசெல். 3?

மெய்ந்நெறி-வீ ட் டு லக .ெ ந றி, மேவினர்

கிட்டினர்; அம்மலையில் வாழும் பாக்கியவான்கள் அழியாத வீட்டுலகப்பேற்றினை அளிக்கும் திருவேங்கடமுடை யானை எப்போதும் வணங்கப்பெற்ற பரிசுத்தமான சிறந்து தவத்தை மேற்கொண்டிருப்பவர்கள். அவர்களின் திருவடிகளை வானர வீரர்கள் தம் தலைமேல் கொண்டு வணங்கினர் என்கின்றான் கவிஞன். சுக்கிரீவன் மலைக்குச் செல்லாது வணங்கி ஒதுங்கிப் போகுமாறு பணித்திருந்தும் அக்கட்டளையை மீறி மலைக்குச் சென்று பெரியோர் களை தரிசித்த புண்ணியத்தின் பயனாலேனும் ஒருகால் பிராட்டியைக் காண முடியுமோ? என்ற எண்ணத்தினால் சென்றனர் போலும், இங்ங்ணம் கம்பன் வாக்கில்காவியப் போக்கில்-மாலவன் குன்றத்தின் பெருமை பேசப் பெறுகின்றது.