பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#63 வடவேங்கடமும் திருவேங்கடமும் வுத்தேர்வு எழுதும் பொழுதே கவிபாடுந் திறன் இயல்பா கவே இவரிடம் அமைந்திருந்தது. வழிவழியாக வைணவ மரபின்வழி வந்தவராகையால் திருமால் பக்தியும் துளசி மனம்போல் இவரிடம் இயல்பாக அமைந்திருந்தது என்று சொல்வதுமிகை. மேற்குறிப்பிட்ட நூல்களின் தொகு ப் ைபு யான் பார்த்ததுண்டு. சிலவற்றில் சில பாடல்களைப் படித்து நுகர்ந்ததுமுண்டு. அவற்றைமட்டிலும் ஈண்டுக் காட்டுவேன். அவை மட்டிலுமே ஆசிரியர் கருத்தில் திரு வேங்கடம் இடம் பெற்றிருக்கும் பாங்கினைக் காட்டும். முதலாவதாகத் திருப்பல்லாண்டில் இரண்டு பாடல் களைப் பார்ப்போம் பல்லாண்டு பல்லாண்டு! வேங்கடக் குன்றின் பயின்றோங்கு நில முகிலே! பல்லாண்டு பல்லாண்டு நின்கொற்ற மார்பின் படிந்தோங்கு கருணை வடிவே. இஃது இச் சிறுநூலில் முதற்பாடல். வேங்கடவர்க் கும் அவன் திருமார்பில் 'அகலகில்லேன் இறையும்’ என்று அகலாதிருக்கும் அலர்மேல் மங்கைக்கும் பல் லாண்டு பாடுகின்றார் ஆசிரியர். அடுத்த பாடலிலும் ஏழுமலையான் மார்பில் இருக் கும் பெரியபிராட்டியார்க்கும் பல்லாண்டு பாடுவதைக் காண்கின்றோம். சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவும் இன்றி உயிர்க்கூட்டம் ஞாலம் வருந்தப் புரிகின்ற நலிவை நினைந்து நின்னுள்ளத்துச்