競零● வடவேங்கடமும் திருவேங்கடமும் பகம்’, ‘திருவரங்கத்துமாலை'. 'திருவரங்கத் தந்தாதி” என்ற மூன்று நூல்களைப் பாடினார். திருவேங்கடத்தின் மீது திருக்கலம்பகம் பாடவில்லை. ஆயின் திருவேங்கடத் தத்தாதி திருவேங்கடமாலை' என்ற இரண்டு நூல்களை மட்டிலும் பாடியுள்ளார். முத்தமிழ்க் கவி வீரராகவ முதலசியார் 'திருவேங்கடக் கலம்பகம்’ பாடி இக் குறையை நீக்கினார். நம் கம்பராமன் ஏழுமலையான் மீது திருக் கலம்பகம்’ பாடி இக்குறையை மேலும் நிவர்த்தி செய் துள்ளார். இதில் ஒரு பாடல் : திருமகளும் நிலமகளும் சிறந்திருபால் பொலிந்திருப்பப் பெருமை தரும் அருள்மத்தை பிறங்குமுளத் திடையோளிர வணி ைமுதும் அடை யாக வளங்குலவு கொடையாகிப் புண்ணியங்கொள் தெய்வ நலப் புயங்கவர சின்பமுற வயங்குபெருங், கருணை நிறை மலர்க்கண்கள் அமுதுாற்ற நலங்குலவு மணிமகுடம் நற்றலைமைப் பொருள்பகரப் புறவிருளும் அகவிருளும் புகாப்புனித நிலையத்தே அருளுருவாய்ப் பொலிந்தோங்கும் அற்புதனார் பரஞ்சோதி. iபுயங்க அரசு-பாம்பு அரசு, ஆதிசேடனன் i என்பது திருவேங்கடமுடையானை வருணிக்கும் கொச் சகம் தலைவியின் கூற்றாக வந்தது. திருவேங்கடமுடை யானின் பெருமையைத் தலைவி எடுத்துக் கூறுகின்றாள்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/300
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
