பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎2 வடவேங்கடமும் திருவேங்கடமும் திரண்டருவி பரவும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் நன்றாய் இசைந்து. -மூன். திருவந்-63 என்ற பாசுரம் அசிஅர வடிவத்தைக் காட்டுவது. இப் பெருமானிடம் சடையும் கிரீடமும் காணப்படுகின்றன. மழுவும் சக்கரமும் காணப்படுகின்றன. சிவபெருமானுக் குரிய பாம்பாகிய அணியும் இவரிடம் தோன்றும்; திரு மாலுக்குரிய பொன் நானும் தோன்றும் என்கின்றார் ஆழ்வார். 'திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந் தகைக்கு உரியதொரு நிலை என்று பேயாழ்வார் சைவத் தொடர்பையும் ஒப்புக்கொள்வதுபோல் அமைந்துள்ளது இப் பாசுரம். இதிலிருந்து சிவச் சின்னங்களும் பேயாழ் வார் காலத்தில் திருவேங்கடமுடையானுக்கு உரியனவாக இருந்தன என்று கருதுவோர் இன்றும் உளர். இவர்கள் இந்த நிலை உடையவரால் மாற்றப்பெற்றது எனவும் ஊகிக்கின்றனர். தங்கள் ஊகத்திற்கு ஆதாரமாக குருபரம் பரைக் கதைகளையும் சுட்டிக் காட்டுகின்றனர். இதனைப் பொறுமையுடன் ஆராய வேண்டும் . ஆறாயிரப்படி குருபரம்பரையில் இராமாநுசர் சைவர்களை நோக்கி, உங்கள் தம்பிரானுக்கு (கடவு ளுக்கு) அசாதாரண சின்னமான திரிசூல-டமருகத்தையும், எங்கள் பெருமாளுக்கு அசாதாரண சின்னபான திருவாழி திருச்சங்காழ்வார்களையும் (சக்கரத்தையும் சங்கையும்) பண்ணித் திருவேங்கடமுடையான் திருமுன்பே வைக்க லாம். அவர் எத்தை எடுத்துத் தரித்துக்கொள்ளுகின் றாரோ அத்தையிட்டு அவர் சொரூப நிரூபணம் பண்ணக் கடவது என்று சொன்னதாக வருகின்றது. இதிலிருந்து இராமாநுசர் காலத்தில் வேங்கடவன் சங்கு சக்கரங் களைத் தரித்திருக்கவில்லை என்பது புலனாகின்றதல்லவா? என்று கேட்கின்றனர். இஃது ஒரு முக்கியமான கேள்வி.