பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கி, இறுதியாக, அவர்களைத் தொடர்ந்து தாம் களம் அடைந்தான்் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். வீரர்கள் தாம் அணிந்து வந்த தும்பைமலர்க் கண்ணிகள், புலவர் பாடும் புகழ்பெறும் வண்ணம் அரிய போர் நிகழ்த்த, பகைவர் படையைச் சேர்ந்த வீரர்கள், உயிரிழந்து போவதோடு, அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஒச்சாத், தன் அறவழிப் போர் நிகழ்ச்சியால், அவர்கள் புறப்புண்பெருது, முகத்திலும் மார்பிலுமே புண்பெற்றுப் புத்தேள் உலகம் அடையுமாறு, அவனும் அரிய போர் ஆற்றியதன் பயனுய்க், களவெற்றி கொண்டு. அவ்வேந்தர்க்குரிய அரண்கள் பலவற்வைத் தன் உடைமையாக்கிக் கொண்டான்.

வேந்தர் பலரைக் கொன்றும், அவர் அரண்களைக் கைக்கொண்டும் வெற்றிப்புகழ் நாட்டிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தன் நாட்டகத்தே அவ்வெற்றிகள் குறித்து எடுத்த விழாக்களின் முடிவில், ஆடியும் பாடியும் தன் புகழ் பரப்பும் பாணர் கூத்தர்போலும் இரவலர் பலர்க்கும், அப்போர்களில் தான்பெற்ற பொருள்களை வாரி வாரி வழங்கி வளமார் புகழ்பெருக்கி வாழ்ந்திருந்தான்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் துணைவேண்டாப் போர்ச் சிறப்பினையும், கொடுத்துக் குடிபுரக்கும் கொடை வளத்தையும் கண்டு பாராட்டி, அவன் அரசவைக்கண் வீற்றிருந்தபுலவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், ஒருமுறை அவைேடு சென்று அவன் கலந்த துளங்கைக் கூத்து ஒன்னேக் காண நேர்ந்தது.

துணங்கைக் கூத்து நிகழ்வதற்காகத் தேர்ந்துகொண்ட ஊர் மன்றில், ஏற்றி வைத்திருந்த பாண்டில் விளக்கிலிருந்து புறப்பட்ட ஒளி, அம்மன்றெங்கும் பரவி, அம்மன்றத்தை

30

30