பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மாகூர்த் திங்கள்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், அருள் நி ர ம் பி ய உள்ளத்தவன். தன்னை அடைந்தாரின் துயர் தீர்த்து வாழ் வளிக்கும் தண்ணளி உடையான். தங்கள் குலக்கொடியும் இலாஞ்சனையுமாக வி ள ங்கு ம் வில்லைப், படைக்கலமாகக் கொண்டு போர்புரியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கும் தறுகளுளன். பிறர் எவரும் பெருத பெருநிலையைப் பெற்று விட்ட பெருமிதத்தால் செம்மாந்து வீற்றிருப்பவராகிய வேந்தர்களுக்கெல்லாம் வேந்தனுக விளங்கும் விறல்படைத்தவன். தம் நிலைகெட்டு வருவார் அனைவர்க்கும், அடைக்கலம் அளிக்கும் அருளாளன் என்ற அவன் பல்வேறு பெருமைகளை யும் ஒருசேர உணர்ந்தமையால், அவனைக் காணும் ஆர்வமே பெருகி நிற்க, சேணெடும் வழிநடந்து சேரநாடு செல்லற்கு ஏற்புடைக்காலம்தான் என்பதையும் எண்ணிப் பாராமல், பனிக்கொடுமை மிகுந்ததான், பின்பணிக்காலத்து முற்பகுதி யாம் மாசித் திங்களிலேயே, அவன் மாநகர் நோக்கிப் புறப்பட்டு விட்டார், புலவர் காக்கைப் பாடினியார்.

வேனிற்பருவத்திற்கு வரவேற்பு வழங்கும் காலம் அது வாகலின், பகற்போதில் ஞாயிற்றின் வெய்யிற்கொடுமை தாங்க முடியாததாகும். ஆகவே அக்கொடுமை மிகுவதற்கு முன்பே, வழியின் பெரும்பகுதியைக் கடந்துவிடவேண்டும் என்று கருதிப் பொழுதுபுலரப் பலநாழிகை உள்ள போதே துயில்நீத்துப் புறப்பட்டுவிட்டார். அவரோடு, ஆடுகோட் பாட்டுச்சேரலாதன்பால் பரிசில்பெற விரும்பிய வேறுசில பாண ர் க ளும் வழித்துணையாயினர். மனப்புறம்போந்து, மாநகர் போகும் பெருவழியில் அடியிட்டதும், பனிக்கொடு.

T9

79