பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மரம்படு திங்கனி

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வாரி வழங்குபன்; அவன் கைவண்மை எந்நிலையிலும் வற்ருது எனக்கேட்டு, அவனைக் கண்டு பரிசில்பெற அ வ ன் தலைநகர்க்கு வந்தாள் ஒரு பாண்மகள்; அந்தோ! ஆங்கு அவளுக்கு ஏமாற்றமே காத்துக் கிடந்தது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தலைநகரில் இல்லை; தலைநகரில் உள்ளாரை உசாவினுள்; அவர் கூறியது கேட்டு அதிர்ச்சியுற்றுப் போளுள். அடலேறனையான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்; வாழ்நாளெல்லாம், அவன், தன் ம ண் கா க் கும் போர், பிறர்மண் கொள்ளும்போர் எனப் போர்த்தொழிலிலேயே கழிப்பன்; ஆகவே, அவன், அப்போது அத்தகைய போர்க்களம் ஒன்றில்தான்் இருப்பான் என எதிர். பார்த்தாள். ஆனால், கூறியவர் அவ்வாறு கூறவில்லை; மாருக, நறவு எனும் ஊரில், உரிமை மகளிரொடு இன்ப வாழ்வு மேற்கொண்டுள்ளான் எனக் கூறினர். பாண்மகள், 'மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது', "நட்டார் குறைமுடியார்நன்று ஆற்ருர், நன்னுதலார் பெட்டாங்கு ஒழுகுபவர்', என்ற வள்ளுவர் வாக்கில் அசையாத நம்பிக்கை உடையவள்.

மாவீரன் அவன்; அதனல், மாற்ருரை வென்று கைக்கொள்ளும் மாநிதிகளை எம்போலும் இயவலர்க்கு வாரிவழங்குவன் என எதிர்பார்த்து வந்த அவளுக்கு, அவன், இளமகளிரோடு இன்பவாழ்வு மேற்கொள்ள எங்கோ சென்று விட்டான் என்ற செய்தி ஏமாற்றம் பயப்பதாக, அவன் சிறந்த வள்ளல்; அதைக் குறைவற நிறைவேற்றவல்ல சிறந்த வீரம் உடையவன் எனத் தாம் கொண்டிருந்த நம்பிக்கையைத்

86

86