பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடப்பதைக் காணவில்லையோ? உண்டார் பசியினைப் போக்கு. வதோடு, தம்மை உண்டவர் அடுத்துக் குடிக்கும் நீரை, அது, உவர் நிலத்து ஊறி, உப்பேறிய நீரே ஆயினும், அதை இனிப்புடையதாக மாற்றி மகிழ்ச்சி அளிக்கும் அக்கனிகளின் மாண்பினை, வரும்வழியில் அது உண்ட நீ, உணரத் தவறி வி ட வி ல் லே .ே ய? அவையெல்லாம், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆக்கி வைத்திருக்கும் நிலையான அறப்பணிகள் அல்லவோ? அம்மட்டோ? பெருவழி மரங்களே அல்லாமல், அவன் நாட்டு நன்செய் புன்செய்களும், விளைந்து பயன்தரும் நிலையிலிருந்து என்றும் மாறுபடுவது இல்லை. அதனல் அவன் நாட்டு வளமோ, அவ்வளத்தால் நிறைவுறும் அவன் நாட்டுக் கருவூலங்களோ, என்றும் வற்றுவது இல்லை. ஆகவே, அவன் எங்கே இருந்தாலும், எப்படியிருந்தாலும், வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பன். ஆகவே, அவ்வளம் பெற்று வரலாம், பாண்மகளே ! எழுக ! ' என விளக்கம் காட்டி விரைவுபடுத்திளுன் பாண்மகன். ஆனால், பாண்மகள், அப்போதும் இருக்கைவிட்டு எழுந்தாள் அல்லள். -

ஒருவன், மலைபோலும் மாநிதிக்கு உரியவனே ஆயினும், அஃது உடையவன், அஃது உடையேம் என்ற செருக்கால், மேலும் பொருள் ஈட்டும் எண்ணத்தை அறவே கைவிட்டுச்சோம்பி இருந்து விடுவனுயின், அம்மாநிதி, ஒரு சில நாட்களுக்குள்ளாகவே இல்லாதிப் போய்விடும்; வாரி வழங்கும் வள்ளல் வழியினன் என்ற குடிப்புகழும் குன்றிவிடும். 'குடி என்னும் குன்ரு விளக்கம், மடி என்னும் மாசுஊர மாய்ந்து விடும்'. ஆகவே, உள்ளபொருள் ஒருவனை வாழ்நாளெல்லாம் பொருள் உடையவனுகவே வைத்திராது. மாருக, பொருள் ஈட்டவேண்டும், பொருள் ஈட்ட வேண்டும் என்ற உணர்வுடைமையே ஒருவனுக்கு அழியாப் பெருவளத்தை வழங்க வல்லதாம் - உள்ளம் உ ைட ைம, உடைமை;

89

89