பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ple

89

pre


படுத்தும் சொத்துகள் எ-டு. ஆலை.எந்திரம்

Pledge - அடகு: கடன் வாங்குபவர் கடன் கொடுப்பவருக்கு ஈடாகக் கடன் தீரும் வரையில் கொடுக்கும் பொருள் எ-டு. தங்க நகை.

Pledgee - கடன் கொடுநர்: அட கின் பேரில் கடன் கொடுப்பவர்

pledgor - கடன் பெறுநர்: அடகைவைத்துக் கடன் வாங்குபவர்

policy - கொள்கை

policy - முறிமம்: முறி பத்திரம்

portfolio - உடைமைப்பட்டியல்: ஒரு முதலீட்டாளரின் ஈட்டு உடைமைகளின் பட்டியல் 2) துறை: கல்வித் துறை

portfolio management - உடைமைப் பட்டியல் மேலாண்மை: முதல், வருமான வளர்ச்சி குறித்த மேலாண்மை . சில முதலீடுகள் நல்ல வருவாய் வாய்ப்புகளையும் ஏனையவை நல்ல முதல் வளர்ச்சி வாய்ப்புகளையும் அளிப்பவை

portmark - துறைமுகக்குறி: ஏற்றுமதிக்குரிய பொருள்க ளின் மீது இடப்படும் சின்னங்கள். அவை அடைய வேண்டிய இடம் குறிக்கப்படும்

possession - உடைமை: நிலம்,வீடு முதலியவை

post acquisition - கையகப்படுத்தலுக்குபின்: ஒரு நிறுவனத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததிற்குப் பின்

postcode - அஞ்சல் குறியீட்டெண்: கடிதங்களில் குறிக்கப்படும் அஞ்சல் பட்டுவாடா எண் எ-டு. தஞ்சாவூர் 613 009

post date - பின் நாளிடல்: ஓர் ஆவணத்தை ஒப்பமிட்ட நாளுக்குப்பின்னதாகத் தேதியிடல். அந்நாளிலிருந்து அது நடைமுறைக்கு வரும் எ-டு. பின் நாளிடப்பட்ட காசோலை

posting - எடுத்தெழுதுதல்: குறிப்பேட்டிலும் ஏனைய துணை ஏடுகளிலும் பதிவாகியுள்ள நடவடிக்கைகள். உரிய தலைப்புகளில் பேரேட்டில் கணக்குகளாகப் பதியப்படுதல்

poverty trap - ஏழ்மை வலை: இது சம்பாதிப்பை ஊக்குவிப்ப தன்று

power of attorny - ஆணை உரிமை வழங்கல்: ஒருவர் மற்றொருவருக்காகச் செயல்பட உரிமை வழங்கும் சட்டப்படியான பத்திரம்

preference share - முன்னுரிமைப் பங்கு: குறிப்பிட்ட வட்டி மட்டும் வழங்கும் ஒரு நிறு வனபங்குத் தொகை. கடன் ஆவணத்திற்கும் பொதுப்பங்கிற்கும் இடைப்பட்டது. நிறுமம் கலையும் பொழுது. கடைசியாகக் கொடுக்கப்படுவது