பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

pre

90

pri


இது மூன்று வகைப்படும்: 1) குவி முன்னுரிமைப் பங்கு: பங்காதயம் செலுத்தப் பெறாத பங்கு. 2) குவியா முன்னுரிமைப் பங்கு: ஒவ்வோராண்டும் போது மான ஆதாயம் கிடைத்தாலே. இதற்குப் பங்காதாயம் கிடைக்கும். 3) மீள் முன்னுரிமைப் பங்கு: தன் வாழ்நாளில் ஒரு நிறுமம் திருப்பித் தருவது

preliminary expenses - தொடக்கச்செலவுகள்: ஒரு நிறுமத்தைத் தோற்றுவிக்க ஆகும் செலவினங்கள்

premium - முனைமம்: 1) காப்பு முறித்தொகை 2) ஒருபங்கின் பெயரளவு மதிப்பிற்குக் கூடுதலாகவுள்ள தொகை. 3) ஒரு பங்கின் வழங்கு விலைக்குக் கூடுதலான தொகை

premium bonus - முனைம ஊக்கத் தொகை: விளைவின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வழங்கும் தொகை.

premium method good will -முனைம முறை நற்பெயர்: நற்பெயரில் ஒரு வகை

price - விலை: ஒரு பொருள் அல்லது பணிக்காக அளிக்கப்படும் தொகை. பணத்தில் குறிப்பிடப்படுவது

primary market - முதல் நிலைச் சந்தை: ஈடுகள் முதல் தடவையாக விற்கப்படும் சந்தை

primary production - முதல் நிலை உற்பத்தி பா. production.

prime costs - முதன்மைச் செலவுகள்: சரக்குகளை உண்டாக்குவதற்குரிய நேரடிச் செலவுகள்

prime entry books - முதன்மைப் பதிவு ஏடுகள் ப.T. book of prime entry.

principal - முதல்வர்: 2) அசல் வட்டி வரக்கூடிய பணத்தொகை

private bank - தனியார் வங்கி: ஓர் அட்டவணை வங்கி எ-டு. யூனியன் வங்கி, பெடரல் வங்கி

private limited company - தனியார் வரையறை நிறுமம் : பொது மக்கள் வரையறை நிறுமம் சாராதது. இதுதன் பங்குகளைப் பொது மக்களுக்கு விற்க இயலாது

private sector - தனியார் துறை: அரசு கட்டுப்பாடு இல்லாதது. தனியார் சேர்ந்து நடத்துவது. பெரும்பாலும் தொழில் நிறுவனமாக இருப்பது. டாடா நிறுமம் ஒ. public sector

privatization - தனியார் வயமாதல்: பொதுத் துறை நிறுமத்தைப் பொருளாதார