பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

supp

106

tar


supplementary costs --- துணைச்செலவுகள்: மேற்செலவுகள்

supply and demand – வழங்கலும் தேவையும்

Surety – 1) பிணையாள்: ஒரு வினையில் இன்னொருவருக்கு உறிதியாளராக இருப்பவர் 2) பிணையம். நன்னம்பிக்கை அடையாளமாக வைக்கப்பட்டிருக்கும் பணத்தொகை

surplus value - மிகை மதிப்பு: கொடுக்கப்படும் கூலிக்கு மேலாகத் தொழிலாளர், உழைப்பால் உண்டாக்கப்படும் விஞ்சு மதிப்பு. மார்க்ஸ் பொருளாதாரத்தில் ஓர் இன்றியமையாக் கருத்து

surrender value – ஒப்படைப்பு மதிப்பு: வாழ்நாள் முறிமத்தில் காப்புறுதி செய்தவருக்குக் காப்புறுதிக் கழகம் கொடுக்கும் பணத்தொகை. முறிமம் முதிர்ச்சியடைவதற்கு முன் உரிய கழிவுடன் கொடுக்கப்படுவது

suspense account – அனாமத்துக் கணக்கு: ஒரு நிறுவன ஏடுகளிலுள்ள தற்காலிகக் கணக்கு. இருப்புகளைச் சரிக்கட்டுவதற்காக வைக்கப்படுவது. பேரம் முடியாததால் இருப்புகள் இறுதி நிலையாக்கப்படாமல் இருக்கும்

systems analysis — அமைப்பு பகுப்பு: ஓர் அமைப்பின் சிக்கல்களையம் குறிக்கோள்களையம் மேம்படுத்தக் கணிப்பொறி உதவி கொண்டு ஆராய்வது

T

taken over bid - வாங்குபேரம்: ஒரு தனியாளோ நிறுவனமோ மற்றோரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க, அதன் பங்குதாரர்களுக்குத் தெரிவிக்கும் குறிப்பீடு

tangible assets – புலனாகும் சொத்துகள்: பார்க்கும் சொத்துகள். தொட்டு உணரக் கூடியவை. எ-டு: . எந்திரம்,ஆலை ஒ. intangible assets.

tanker - நீர்மக்கலன்: நீர்மம், எண்ணெய், ஒயின், நீர்ம வளிகள் முதலியவற்றை ஏற்றிச் செல்லும் ஊர்தி. இது கப்பலாகவோ, வானுர்தியாகவோ சரக்குந்தாகவோ இருக்கலாம்

targets - இலக்குகள் : ஓர் அரசு பின்பற்றும் பொருளியல் கொள்கையின் குறி எல்லைகள். முழு வேலை வாய்ப்பு, நிலையான விலைகள், மொத்த மனையகப்பொருள்களின் அதிக வளர்ச்சி முதலியவை இவற்றில் அடங்கும்