பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

unab

113

unit



போதுமான ஆதாயம் ஈட்டும் பொழுது மட்டும், இவற்றிலிருந்து ஆதாயம் பெற இயலும்

2) முன்னுரிமை பெறும் பங்குகள்: பங்காதாயத்திலும் நிறுமம் கலையும் பொழுதும் முதலைத் திருப்பித்தரப்படும் பொழுதும் இவ்வகைப் பங்குதாரர்கள் முன்னுரிமை பெறுவர். இவர்களுக்குக் குறிப்பிட்ட வீதப்பங்காதாயமே கிடைக்கும்



U

unabsorbed cost கொள்ளப்படாச் செலவு: உற்பத்தி முறையின் மேற்செலவுகளின் ஒரு பகுதி. உற்பத்தி குறிப்பிட்ட அளவுக்குக் கீழ்ச் செல்லும் பொழுது மேற்செலவுகளில் வருவாய் சேராது

unappropriated profit – ஒதுக்கப்படா ஆதாயம்: ஒரு நிறுமத்தின் ஆதாயம் குறிப்பிட்ட நோக்கத்திற்கு ஒதுக்கப்படுவதுமில்லை. பங்கு ஈவுகளாகக் கொடுக்கப் படுவதுமில்லை

uncalled- capital – அழையா முதல்: காப்பு முதல். ஒரு நிறுமத்தின் வெளியிட்ட முதல். நிறுமம் கலைக்கப்படும் பொழுதே அழைக்கப்படும்

unclaimed dividend - கோரா இலாப ஈவு

underwriter - ஒப்புறுதியாளர்: 1) ஓர் இடரை ஆராய்ந்து, அது காப்புறுதி செய்யப்படலாமா என முடிவு செய்பவர் 2) விற்கப்படாப் பங்குகளை வாங்க உறுதியளிக்கும் வங்கி. பொதுவாக, ஒப்புறுதியாளர்கள் கழிவு பெறுபவர்கள்

underwriting - ஒப்புறுதி: ஒப்புறுதியளித்தல்

underwriting commission — ஒப்புறுதிக் கழிவு: ஒப்புறுதியாளர் பெறுவது

undistributable reserves — பகிர்ந்தளிக்கப்படாத காப்புகள்

undistributed profit — பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்: ஒரு நிறுவனம் ஈட்டிய ஆதாயம், பங்கு ஈவுகளாகப் பிரித்துக் கொடுக்கப்படாத நிலை

unit - அலகு: ஓர் அளவின் திட்டம்

unit cost -அலகு செலவு: ஓர் உற்பத்தியலகிற்கு ஆகும் செலவு எ-டு. ஒரு குளிர் பதனி செய்யும் செலவு

unit labour costs — அலகுத்தொழில் செலவு: ஓரலகு உற்பத்திக்கு ஆகும் உழைப்பின் மொத்தச் செலவு

unit of account – கணக்கலகு: பணத்தின் வேலை. அதைப்