பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

adv

6

aids


advice note – அறிவுப்புக்குறிப்பு: தகவல் குறிப்பு. ஒரு நிறுமத்தார் தாம் வழங்கிய சரக்குகள் பற்றிய விளக்கக் குறிப்பைத்தம் வாடிக்கையாளருக்கு அனுப்புதல். இது விலைப்பட்டி, வழங்குகுறிப்பு ஆகியவற்றிற்கு முன்னதாகச் செல்லும்.

advise fate – அறிவு: ஒரு வங்கியில் வழங்கப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்கலாமா என வதுல் செய்யும் வங்கி நேரிடையாக வழங்கிய வங்கிக்கு வேண்டுகோள் விடுத்தல்.

advisory committee – அறிவுரைக்குழு: ஒரு நிறுவன மேம்பாட்டிற்கு அறிவுரை வழங்கும் குழு.

after date — பின்னாள்: மாற்றுண்டியலில் குறிக்கப்படும் சொற்கள். உண்டியலில் குறிக்கப்பட்ட நாளிலிருந்து அதன் காலம் தொடங்கும். எ-டு. 30 நாட்கள்.

after sales service — விற்பனைப் பின்பணி: ஒரு பொருளை விற்பனை செய்த பின், அதனை உற்பத்தியாளர் பேணும் முறை. உறுதியளிப்பு இதில் அடங்குவது. எ-டு. வாங்கப்பட்ட கடிகாரம் ஒராண்டிற்குள் பழுதானால் இலவசமாக அதைப் பழுது பார்த்துத் தருதல். இது பிற பொருள்களுக்கும் பொருந்தும். விற்பனை உயர்வுக்கும் வணிக வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த வழி.

after sight - பார்த்தபின்: மாற்றுண்டியலில் குறிக்கப்படும் சொற்கள். அதைப் பெறுபவர் ஏற்புக்காக அதையளிக்கும் நாளிலிருந்து அவ்வுண்டியலின் காலம் தொடங்க வேண்டும் என்பது பொருள்.

agency - முகமையகம்: வாடிக்கையாளர்களுக்காக வாணிபப் பணி செய்யும் அமைப்பு.

agenda - நிகழ்ச்சி நிரல்: கூட்டநடவடிக்கைகளுக்குரிய வரையறை. கூட்டம் பல நோக்கங்களுக்காக இருக்கலாம். எ-டு. நிறுமக் கூட்டம்.

agent - முகவர்: மற்றொருவருக்காகச் செயல் படுபவர். எ-டு. செய்தி முகவர்.

agreement - உடன்பாடு: இருவருக்கிடையே வாணிபம் குறித்து ஏற்படும் உடன்படிக்கை.

agriculture bank – வேளாண் வங்கி: வேளாண் வளர்ச்சிக்காக உள்ள வணிக நிறுவனம்.

aids to trade – வணிகக் கருவிகள்: முறையான வணிகவியல் ஆராய்வு, வணிகத்திற்காக ஏற்கும் நான்கு கருவிகள்: விளம்பரம் செய்தல், வங்கித்-