பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

divi

46

double


பகுதியை, அதன் பங்குதாரர்களுக்கு அளித்தல். இது விழுக்காட்டில் குறிக்கப்படுவது. 10% பங்கு ஈவு 2) தன் ஆதாயங்களின் ஒரு பகுதியைக் கூட்டுறவுச் சங்கங்கள் தன் உறுப்பினர்க்கு அளித்தல். இது இடைக்காலப்பங்கு ஈவு, இறுதிப்பங்கு ஈவு என இரு வகை

dividendeduilization reserve— பங்கு ஈவுச் சமன்காப்பு: இலாபம் அனைத்தையம் வழங்காது. அதன் ஒரு பகுதியை எதிர்காலத்தில் இலாபம் வழங்குவதற்காக ஒதுக்கல்

dividend warrant – பங்குஈவு ஓலை: ஒரு நிறுமம் பங்கு ஈவுகள் கொடுக்கும் பொழுது. அதன் பங்குதாரர்களுக்கு வழங்கும் காசோலை

divisible profit – பிரிஇலாபம்: பிரித்தளிக்கக் கூடிய ஆதாயம்

dockets - குறிப்புச் சீட்டுகள்

dock receipt – கப்பல்துறை வரவுச்சீட்டு: கப்பல் துறைக்கிடங்கு சரக்குகளுக்கு வழங்குவது. கப்பலில் ஏற்ற இருப்பவை

dock warrant – கப்பல்துறை ஆணைச்சீட்டு: சரக்கு அனுப்புபவர்களுக்கு உரிமை கருதி அளிக்கப்படுவது

documentary bill – ஆவண உண்டியல்: கப்பல் சரக்கு ஆவணங்களுடன் இணைக்கப்பட்டிருப்பது. இந்த ஆவணங்களில் கப்பல் வரவுச்சீட்டு, காப்புறுதி முறி, கப்பல் ஏற்றுமதிச் சீட்டு, இடாப்பு ஆகியவை இருக்கும்

documentary credit-ஆவணப் பற்று: இது ஒரு பற்று ஏற்பாடு. இதில் குறிப்பிட்ட தொகைக்கு அயல்நாட்டு வாங்குநர் பேரில் ஏற்றுமதி செய்யப்பட்ட் சரக்குகளுக்காக வரையப்பட்ட மாற்றுண்டியலை ஒரு வங்கி வழங்கும்

documents -ஆவணங்கள்: எ-டு. மாற்றுண்டியல், இடாப்பு

double entry system – இரட்டைப் பதிவு முறை: கணக்கெழுதும் முறையில் முக்கிய மானது. இதில் பற்று, வரவு என்னும் இருதலைப்புகளில் பதிவுகள் எழுதப்பெறும் ஒ.Single entry system

double entry system, benefits of - இரட்டைப் பதிவுமுறையின் நன்மைகள்: 1) வணிகருக்குச் சரியான பதிவைத் தருவது

2) இருப்பாய்வு அறிக்கை தயார் செய்ய உதவுவது

3) வாடிக்கையாளர் தர வேண்டிய தொகைகளைத் தெரிவிப்பது

4) பொறுப்பு எவ்வளவு என்பதையுந் தெரிந்து கொள்ளலாம்