பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

exch

51

expiry


பணிகள், செய்தி, உறுதி மொழிகள் முதலியவை இவற்றில் அடங்கும். மாற்று நடை பெறும் இடம் அங்காடி அல்லது சந்தை. இது பொருளாதாரப் பகுப்பின் குவியமாகும்

exchange control – செலாவணிக் கட்டுப்பாடு; அயல் நாட் டுச் செலாவணி, விற்பனை, கொள்முதல் ஆகியவற்றில் விதிக்கப்படும் தடைகள்

exchange rate – செலாவணிவீதம் பா. rate of exchange.

excise duty – சுங்கவரி: ஆல்ககால், புகையிலை முதலிய பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி

executive director – நிறைவேற்று இயக்குநர்: ஒரு நிறுமத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்

exdividend — பங்கு ஈவு இன்றி

exgratia - அருட்கொடை கருணைத்தொகை. அன்பு, கட்டுப்பாடு முதலியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் தொகை. இதில் சட்டக் கடமையை எதிர்பார்க்க வேண்டிய தேவை இல்லை

exinterest — வட்டி இன்றி

expected profit - எதிர் பார்க்கும் இலாபம்

expenditure- செலவு: பொருள்களுக்காகவும் பணிகளுக்காகவும் - செலவழிக்கப்படும் தொகை

expenses, financial – நிதியச்செலவுகள். கடன் மீது வட்டி, மேல்வரைப்பற்று மீது வட்டி முதலியவை

expenses, incidental – தற்செயல் செலவுகள்: இடைநிகழ் செலவுகள்

expenses, maintenance – பேணும் செலவுகள்: பழுது பார்க்கும் புதுப்பிக்கும் செலவுகள், தேய்மானம் முதலியவை

expenses, management – மேலாண்மைச் செலவுகள்: அலுவலகச் சம்பளம், அலுவலக வாடகை, எழுதுபொருள் வாங்கல், அச்சுக்கூலி முதலியவை

expenses,outstanding கொடுபடவேண்டிய செலவுகள்

expenses, prepaid — முன்கூட்டியே செலுத்தும் செலவுகள்

expenses, selling — விற்பனைச் செலவுகள்: விளம்பரம், பயணச்செலவுகள் முதலியவை

expiry duty - முடியும் நாள்: கடைசிநாள். ஓர் ஒப்பந்தம் முடியும் காலம்