பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

expo

52

fast


export incentive — ஏற்றுமதி ஊக்குவிப்பு: உதவித்தொகை, மானியம், வரிச்சலுகை முதலியவை

export licence - ஏற்றுமதி உரிமம்: ஏற்றுமதி செய்யும் உரிமம்

exports – ஏற்றுமதிகள்: அந்நியச் செலாவணி ஈட்ட ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகள். அயல்நாடுகளுக்கு அனுப்பப்படுபவை

externalreconstruction– புறச் சீரமைப்பு: ஒருநிறுமத்தில் புறத்தே செய்யப்படும் மாற்றம் பா.internal reconstruction.

extra — ordinary meeting — சிறப்புக்கூட்டம்: ஒருநிறுமத்தின் ஆண்டுக்கூட்டம் அல்லாத ஏனைய கூட்டம்

extra-ordinary items – சிறப்பினங்கள்: அடக்கங்கள் அல்லது வருமானம். இவை ஒரு நிறுமத்தின் இலாப நட்டக் கணக்கைப் பாதிப்பவை. இவை நிறுமத்தின் இயல்பான செயல்களிலிருந்து வருபவை அல்ல

extra-ordinary resolution — சிறப்புத்தீர்மானம்: ஒரு நிறுமப் பொதுக்கூட்டத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படுவது

F

face value - முகமதிப்பு: 1) ஒரு பிணையத்தின் முகத்தில் அச்சிடப்பட்டுள்ள பெயரளவு மதிப்பு. இது சமமதிப்பாகும். அதாவது, அங்காடி மதிப்புக்குச் சமமானது 2) வங்கித்தாள் பணம் அல்லது நாணயத்தில் அச்சிடப்பட்டுள்ள மதிப்பு

facsimile transmission – உருநகல் செலுத்துகை பா. Fax.

'fact book - மெய்யேடு: ஒரு விளைபொருள் பற்றிய வரலாற்றுச் செய்தி கொண்ட கோப்பு. இதில் விற்பனைத் தகவல்கள், பகிர்வு, போட்டி, வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட அங்காடி ஆராய்ச்சி முதலிய தகவல்கள் இருக்கும்

fair value – நேர்மையான மதிப்பு: பங்கின் நேர்மையான மதிப்பு, நிகரச் சொத்தின் மதிப்பு, வருவாய் உள் மதிப்பு ஆகிய இரண்டின் சராசரி பங்கு நேர்மை மதிப்பு = பங்கின் உள் மதிப்பு + வருவாய் மதிப்பு / 2

fast-moving consumer goods - விரைந்து விற்கும் நுகர்பொருள்கள்; சில்லரைக் கடைகளில் விரைவாக விற்பனைக்கு அளிக்கப்படும்