பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

good

59

group


good - சரக்கு பண்டம் அல்லது பணி. மனிதத் தேவையை நிறைவு செய்வது. இது பொருளாதாரச் சரக்கு, தடையில்லாச் சரக்கு என இருவகை

good will – நற்பெயர்: புலனாகாச் சொத்துகளின் மதிப்பையும் விஞ்சுவது. ஒரு தொழில் அதிக இலாபம் ஈட்டுவதே இவ்விஞ்சு மதிப்புக்குக் காரணம். இந்நற்பெயர் விற்கக் கூடிய சொத்து. ஒரு தொழில் விற்கப்படும் பொழுது இதற்குத் தனி விலை உண்டு பா amortization.

government bonds — அரசு ஆவணங்கள்: அரசுப்பத்திரங்கள்

grey market — சாம்பல் நிறச்சந்தை: சரக்குகள் வழங்குகை குறைவாகவுள்ள அங்காடி ஒ. black market.

gross income - மொத்த வருமானம்: ஒரு சம்பாதிப்பில் செலவு நீக்குவதற்கு முன்னுள்ளது. இது ஒரு தனியாள் அல்லது நிறுவனத்திற்குரியது

gross interest - மொத்தவட்டி: வரி கழிப்பதற்கு முன், குறிப்பிட்ட கடன் அல்லது வைப்பு நிதிக்குள்ள வட்டியளவு

gross investment — மொத்தமுதலீடு பா investment.

gross margin –மொத்த மிச்சம்: விற்பனைக்கு அளிக்கப்படும் சரக்குகளின் சில்லரை விலைக்கும் அவற்றின் மொத்த விலைக்குமுள்ள வேறுபாடு. சில்லரை விலையின் விழுக்காடாகத் தெரிவிக்கப்படுவது

gross national product, GNP – மொத்தத் தேசியப் பொருள்: மொத்த மனையகப் பொருள். இத்துடன் வட்டிகள். ஆதாயங்கள், பங்கு ஈவுகள் ஆகியவையும் சேர்க்கப்படும் மொதேபொ

gross profit – மொத்த இலாபம்: மொத்த ஆதாயம். ஒரு நிறுமத்தின் மொத்த விற்பனை வருவாய். விற்கப்பட்ட சரக்குகளின் அடக்க விலையை இதில் கழிக்க வேண்டும்

gross weight - மொத்த எடை: ஒரு பொட்டலத்தின் மொத்த எடை. இதில் அதிலுள்ள பொருள்கள், உறை ஆகியவையும் அடங்கும். பொருள்களின் எடை மட்டும் நிகர எடை. உறையின் எடை உறை எடை. உறையின் எடையைக் கழிக்க நிகர எடை கிடைக்கும்

gross yield – மொத்த வினைப்பயன்: வரியைக் கழிக்குமுன் ஓர் ஈட்டின் பேரில் கணக்கிடப்படும் விளை பயன். வரி நீக்கிய பயன் நிகர விளை பயன்

group discussion - குழுக் கலந்துரையாடல்: ஒரு நேர் காண்பவர் வழிகாட்டுதலின்