பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

index

64

Inland


index -

1) பொருள் அடைவு: பொருள்முதல் குறிப்பு. நூலுக்குப்பின் அதன் பொருளைத் தெரிந்து கொள்ள ஆடிபோல் இருப்பது

2) குறியீடு: i) எண் விசைப் பெருக்கக்குறி ii) எண்: விலகல் எண். iii) வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் சார்பான மாற்றங்களைக் காட்டும் எண் அளவு: வாழ்க்கைக் குறியீடு

indexation, index linking — விலைக் குறியீட்டு இணைப்பு: கூலி, வரி, சமூகக் காப்புத் தொகை முதலியவற்றைப் பொது விலையளவு உயர்வோடு இணைத்தல். பணவீக்க விளைவுகளைக் குறைக்க, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது

index number — விலைக் குறியீட்டெண்: தற்கால ஆண்டுக்கும் அடிப்படை ஆண்டுக்கும் இடையிலுள்ள மதிப்புத் தொகுதியின் மாற்றங்களைக் குறிக்கப்பயன்படும் எண்

indirect costs மறைமுக ஆக்கச் செலவுகள்

பா. overhead costs.

inflation பணவீக்கம்: ஒரு பொருளாதாரத்தில் கூலிகள், விலைகள் ஆகியவற்றின் அளவு நிலையாக உயருதல். இதைப்பல காரணிகள் உண்டாக்குபவை. பண வழங்குகையில் ஏற்படும் விரைந்த உயர்வு பொதுவான ஒரு காரணி. பணவழங்குகையைக் கட்டுப்படுத்தினால் இவ்வீக்கம் கட்டுக்குள் வரும்

Information technology செய்தித் தொழில் நுட்பவியல்: தகவல் தொழில் நுட்பவியல். செய்தியை முறையாக்கவும் பகிர்ந்தளிக்கவும் கணிப்பொறி, தொலைக்காட்சி முதலிய மின்னணுக் கருவியமைப்புகளைப் பயன்படுத்துதல்

internal reconstruction அகச் சீரமைப்பு: சரிவர இயங்காத நிறுமத்தில் உரிய மாற்றங்கள் செய்து இருப்பு நிலைக் குறிப்பு தயாரித்து, வெளியிட்டு, மக்கள் நம்பிக்கையைப்பெற்று, நடப்பு முதலை கூட்டுதலும் வணிக வளர்ச்சி உண்டாக்கலும்

infrastructure: அகக் கட்டமைப்பு: சமூக மேற்செலவு முதல். சரக்குகள், பணிகள் ஆகியவற்றிற்குக் குறிப்பிடத்தக்க முதலீடு தேவை. இம்முதலீடு ஒரு பொருளாதாரம் செயற்பட இன்றியமையாதது. எடுத்துக்காட்டாகச் சாலைகள், இருப்புப் பாதைகள் மின் வழங்குகை ஆகியவை சமுதாயக் கட்டமைப்பின் இன்றியமையாக் கூறுகள். இக்கட்டமைப்பு ஒரு நிறுவனத்திற்குரியது

Inland bill — உள்நாட்டு உண்டியல்