பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

inv

67

job




investment income – முதலீட்டு வருமானம்: முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய்.

invisible assets – பார்க்க இயலாச் சொத்துகள்: பா. intangible assets.

invisible balance — பார்க்க இயலா இருப்பு: நாடுகளுக்கிடையே உள்ள செலுத்தீடுகளின் இருப்பு. எ-டு. காப்பீடு, வங்கி முதலியவை மூலம் வருபவை.

invoice - இடாப்பு: விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் இது ஒர் ஆவணம். ஒவ்வொரு முறை சரக்கு விற்கும் பொழுதும் இது இரண்டு அல்லது மூன்று படிகளில் தயாரிக்கப்படும். ஒன்று வாங்குபவருக்கு அனுப்பப்படும். ஏனையவை விற்பவரிடமே இருக்கும். அனைத்து விவரங்களும் இதில் இருக்கும். பட்டியல் என்றும் கூறலாம்.

invoice price – இடாப்பு விலை: பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விலை.

issue - வெளியீடு: வழங்கீடு குறிப்பிட்ட காலத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பங்கு எண்ணிக்கை.

issued share capital --வெளியிட்ட பங்குமுதல்.

issue price — வெளியிடும் விலை: பங்குகளின் புதிய வழங்கீடு. பொது மக்களுக்கு விற்கப்படும் விலை.



J

job analysis – வேலைப்பகுப்பு: பணிப் பகுப்பு. ஒரு நிறுவனத்திலுள்ள மற்ற வேலைகளோடு ஒரு குறிப்பிட்ட வேலையின் தொடர்பு, அதைச் செய்வதற்கு வேண்டிய கருவிகள் முதலியவை பற்றி ஆராய்தல். அவ்வேலையை எவ்வாறு சிறப்பாகச் செய்யலாம், அதைச் சிறப்பாகச் செய்வதற்குரியவரின் தகுதி, திறமை, பான்மை என்பனவற்றையும் இப்பகுப்பு வெளிப்படுத்தும்.

job Costing – பணியாக்கச் செலவு: மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வேலைக்கும் ஏற்படும் தனி அடக்கச் செலவுகள். இம்முறை பொறி இயலில் பயன்படுவது. ஏனெனில், இதில் வேறுபட்ட பல வேலைகள் செய்யப்படும். இங்கு ஒரு படித்தான விளைபொருள் என்பது இல்லை.

job evaluation – வேலை மதிப்பீடு: ஒரு குறிப்பிட்ட வேலையில் தேவைப்படும் உழைப்பை மதிப்பிடல். அதைச் செய்பவரின் பொறுப்புகள், திறன்கள், பட்டறிவு, தகுதிகள் எல்லாவற்றையும் அறிதல். இதனால் அவ்வேலைக்கு எவ்