பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

joint

68

lease


 வளவு ஊதியம் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யலாம்.

joint account - கூட்டுக்கணக்கு இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து வங்கியில் வைக்கும் கணக்கு. ஒரு நிறுவனத்தில் செய்யப்படுவது. மூவரும் கையெழுத்திட்டால்தான் பணம் எடுக்க இயலும்.

joint investment – கூட்டுமுதலீடு: இரண்டிற்கு மேற்பட்டவர்கள் ஓர் ஈட்டை வாங்குதல்.

joint stock company –கூட்டுப்பங்கு நிறுமம்: தங்கள் கூட்டுப் பங்கின் அடிப்படையில் ஒரு நிறுமத்திலுள்ளவர்கள் வணிகம் செய்தல்.

joint venture –கூட்டு வினை: இணை வணிக முயற்சி.

journal - குறிப்பேடு: எத்துணை ஏட்டிலும் எழுத இயலாத நடவடிக்கை மட்டும் இதில் பதிவு செய்யப்படும். எ-டு. சரிக்கட்டும் பதிவுகள், பிழை திருத்தப்பதிவுகள். ஒரு முதன்மைப் பதிவேடு.

journal entries — குறிப்பேட்டுப் பதிவுகள்: 1) தொடக்கப் பதிவுகள் 2) மாற்றுகைப் பதிவுகள் 3) பிழைநீக்கப் பதிவுகள் 4) முடிவுப் பதிவுகள். 5) சரிக்கட்டுப் பதிவுகள்.

journalising – குறிப்பேட்டில் பதிதல்: பதிவுகளைக் குறிப்பேட்டில் ஏற்றல்.



K

Keynesianism - கெயினிசியம்: கெயினிசின் (1883-1946) பொருளியல் கொள்கை. பெரும் பொருளியலுக்குரிய அணுகுமுறை. இவர் பணியின் அடிப்படையில் அமைந்தது. அங்காடிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை எனில் பின்னடைவும் பேரளவு வேலையின்மையும் உண்டாகும்.



L


land charges –நிலக்கடன்கள்: வேறு செலவுகளுக்காக நிலத்தை அடமானம் வைத்து வாங்கும் பொறுப்புகள்.

landing charges – இறங்கு கட்டணங்கள்: துறைமுகத்தில் ஒரு சரக்கை இறக்குவதற்குரிய செலவுகள்.

lease - 1) குத்தகை: விளைபொருள் உள்ள நிலத்தை (நெல், கனிமம்) ஆதாயம் பெற ஒருவர் மற்றொருவருக்கு விடுதல் 2) வாடகைக்கு விடல்: ஒரு வீட்டை ஒருவர் மற்றொருவருக்குக் குடிக்கூலிக்கு விடுதல்.

lease holder – 1)குத்தகைக்காரர் 2) வாடகையர்.

leasehold property - குத்தகைச் சொத்து: சாகுபடி நிலம், கனிமச் சுரங்கம்.