பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துறைதோறும் தமிழ்

பதிப்பாசிரியர் தமிழவேள் ச. மெய்யப்பன்


மிழ் மொழி சொல் வளம் மிகுந்த மொழி. மானுடவியல் சார்ந்த கருத்துக்கள் எவற்றையும் தமிழில் எழுத முடியும். இலக்கியச் சொற்கள் நூறாயிரத்திற்கும் மேல் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் உள்ளன.

புதிய புதிய துறைகளில் புதிய கருத்துக்கள் நாளும் பெருகி வருகின்றன. சொல் புதிது, பொருள் புதிது எனப் பாரதியாரின் மொழிக் கேற்பத் தமிழில் துறைதோறும் சொற்கள் பெருகி வருகின்றன. புதிய துறைகளைக் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் புதிய அகராதிகள் காலத்தின் கட்டாயமாகின்றன. இந்த வகையில் வணிகவியல் அகராதி முன்னோடியாகத் திகழ்கிறது.

விடுதலைக்குப் பின் இந்திய மொழிகள் வீறு பெற்றன. தாய் மொழி மூலம் உயர்கல்வி கற்பிக்கும் நிலை மேலோங்கி வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வி வேண்டும் என்னும் கருத்து வேர் ஊன்றிவிட்டது. ஒவ்வொரு மொழியிலும் கலைச் சொல்லாக்கம் அரிய கலையாகவே உள்ளது. அறுபது எழுபது ஆண்டுகளாகத் தமிழில் கலைச் சொல்லாக்க முயற்சி நடந்து வருகிறது.

தமிழ்நாளிதழ்கள், தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் கலைக் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியல் களஞ்சியம், கலைக் கதிர் வெளியீடான சொற்களஞ்சியத்தின் 3 தொகுதிகள், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மானிடவியலில் 10-க்கு மேற்பட்ட துறைகளில் வெளியிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாடநூல்கள் முதலியவற்றில் கலைச் சொற்கள் பல்கிக் கிடக்கின்றன. அவற்றில் விரவிக் கிடக்கும் பொருளியல், நிதியியல், வணிகவியல் சொற்கள் அனைத்தும் இங்கே முறையாக அகரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற சரியான தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொருள் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளது. தரப்படுத்தப்பட்ட சொல்லாக்கங்களே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளன. பொருள் விளக்கத்திற்கு விளக்கங்களும் வரையறை-