பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

mass

75

mini



செல்லும் காட்சிக் கருவிகள் எ-டு. செய்தித்தாள், தொலைக்காட்சி

mass production – பேரளவு உற்பத்தி: ஒத்த தன்மையுள்ள பொருள்களை அதிக அளவு தொழிற்சாலைகளில் உருவாக்கல். இதற்குத் தொடர் தானியங்கு முறை பயன்படுவது

maturing date - முதிர்ச்சி நாள்: பத்திரம், மாற்றுண்டியல் முதலிய ஆவணங்களுக்குப் பணம் கொடுப்பதற்குரிய நாள். வேறுபெயர் மீட்பு நாள்

mean price — சராசரி விலை: ஈடு, பண்டம், செலாவணி ஆகியவற்றின் குறிப்பீட்டு விலைக்கும் அதன் கேள்வி விலைக்குமுள்ள சராசரி. நடுவிலை என்றும் பெயர்

media - ஊடகங்கள்: காட்சிக் கருவிகள் எ-டு தொலைக்காட்சி, செய்தித்தாள்.

media persons – ஊடகத்தார்: செய்தியாளர்கள், தொலைக்காட்சியகத்தார் முதலியோர்

medium of exchange – பண்டமாற்று ஊடகம்: மாற்றுக் கருவி. சரக்குகளுக்காகவும் பணிகளுக்காகவும் குறைந்ததும் உள்ளார்ந்த மதிப்புள்ளதுமான ஒரு பொருள் வழக்கமாகக் கொடுக்கப்படுதல்.இப்பொழுதும் சிற்றுார்களில் நெல் கூலியாகக் கொடுக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், தற்பொழுது இதற்காக உலகெங்கும் பயன்படுவது பணம்

memorandum of association - சங்க முறையேடு: இது நிறுமத்தின் பட்டயம். இதில் இருக்க வேண்டியவை: 1) நிறுமப் பெயர் 2) நிறுமப் பதிவகம் அமையும் மாநிலம் 3) நிறும நோக்கங்கள் 4) உறுப்பினர்களின் பொறுப்பு வரையறை 5) அனுமதித்த முதலும் அதன் பங்குப் பிரிவும் 6) நிறும அமைப்பு பற்றிய விளக்கம்

memoradum revaluation method - நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு முறை

merchant – வணிகர்: ஒரு பொருளை வாங்கி விற்பவர். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்

merger- இணைப்பு: பொது நன்மை கருதி இரண்டிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படுதல் எ-டு. தஞ்சாவூர் வங்கி இந்தியன் வங்கியோடு இணைக்கப்பட்டது

middleman — இடையாள் um.broker.

minimum subcription – சிறுநிதித் தொகை: ஒரு புதிய நிறுமத்தின் வாய்ப்பறிக்கையில் கூறப்பட்டுள்ள குறைந்த அளவுத்தொகை. இத்தொகை நன்கு இயங்கப்போதும் என இயக்குநர்கள் கருதுதல்