பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ordi

over

84

மைக்கு வருத்தம் தெரிவித்தல் இல்லாதவரை அவற்றிற்குப் முந்திய கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பைப் படித்தலும் கையெழுத்திடலும்,அறிக்கை படித்தல் முதலியவை.

ordinary resolution –பொதுத் தீர்மானம்:பா.resolution

ordinary shares – பொதுப் பங்குகள்: ஒரு நிறுமத்தின் பங்கு முதலின் குறிப்பிட்ட அலகு. நாளாவட்டத்தில் இவை முதலீட்டு வளர்ச்சி காரணமாக அதிக ஆதாயம் தருபவை.

organizational buying — நிறுவன வாங்குகை: ஒரு நிறுவனம் அடையாளங்கண்டும் மதிப்பிட்டுத் தேர்ந்தெடுத்தும் ஒரு விலைபொருளை வாங்குதல்.

organized market – முறைசார் சந்தை: ஒழுங்காக அமைந்த அங்காடி. இங்கு வாங்குபவரும் விற்பவரும் . கூடி விதிமுறைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு வணிகம் செய்தல். எ-டு. பங்குச் சந்தை, பண்டச்சந்தை.

origin- தோற்றுவாய்: ஒரு சரக்கு உண்டாகி வரும் நாடு

original entry book – மூலப்பதிவேடு: பா. book of prime entry

original goods:மூலச்சரக்குகள்: இயற்கை விளைபொருள்கள், உற்பத்திக் காரணிகள் பொருள்களின் மீது குறிப்பிட்ட காலத்தில் செலவிடப்படும் பணம். கணக்குப் பதிவியலில் இது மொத்த ஆக்கச் செலவு ஆகும். ஆனால், பொருளியல் வாய்ப்புச் செலவிற்காக உரிய உயர்வு சேர்க்கப்படும்

outlay tax — செலவீட்டு வரி: பா. expenditure tax.

output - வெளிப்பாடு: 1) உற்பத்தி 2) செய்தி அனுப்பும் முறை.

outside share holders — புறப்பங்குதாரர்கள்: துணை நிறுமத்தில் உள்ளவர்கள்.

overbought - மேல் வாங்கல்: தேவைக்கு மேல் சரக்குகளைக் கொள்முதல் செய்தல்.

overbought market — மேல் வாங்கு சந்தை: வாங்கலினால் விரைவாக உயரும் அங்காடி. இது நிலையில்லாதது.

overcapitalization – மேல் முதலீடு செய்தல்: தன் தேவைகளுக்காக ஒரு நிறுமம் அதிக