பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

perso

88

plant


அல்லது நிறுமத்தின் பேரிலுள்ள கணக்கு. இது வரவேண்டியதும் கொடுபட வேண்டியதுமான இனமாகும். விற்பனைப் பேரேட்டிலும் கொள்முதல் பேரேட்டிலும் காணப்படுவது. இதன் வகைகள் : 1) தனியாள் கணக்கு. அன்பழகன். மதியழகன். 2) நிறுமக்கணக்கு: பேரி அண்ட் கோ. 3) வங்கிக் கணக்கு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. 4) கூட்டுறவு வங்கிக் கணக்கு: மையக்கூட்டுறவு வங்கி

personal allowances - தனிப்படிகள்: தனிவருமானங்கள். இவை வரிவிலக்கிற்குரியவை

personal assistant - நேர்முக உதவியாளர்: மேலாளர், இயக்குநர் முதலியோருக்கு உதவியாக இருப்பவர்

personal loan - தனிக்கடன்: மிதிவண்டி, தொலைக்காட்சி பெட்டி முதலியவை வாங்க வங்கி தனியாருக்குக் கொடுக்கும் கடன். கடன் தொகை திரும்பத் தவணைகளில் செலுத்தப்படுவது

personal property- தனிச் சொத்து: சொந்தச் சொத்து. பணம். பங்குகள்

personnel management - ஊழியர் மேலாண்மை ; ஒரு நிறுமத்தில் வேலை பார்ப்பவர்களை அவர்கள் வேலை தொடர்பாக மேலாண்மை செய்தல்

petty cash book - சில்லரைப்பண ஏடு: சில்லரைச் செலவினங்கள் பதியப்படும் ஏடு எ-டு. அஞ்சல் செலவுகள், சிற்றுண்டிச் செலவு

petty pxpenses - சில்லரைச் செலவுகள் பா. petty cash book.

physical capltal- மெய்யீட்டு முதல்: கண்ணால் பார்க்கக் கூடியது எ-டு. நிலம், கட்டிடம், எந்திரம். பொருள்களையும் பணிகளையம் உண்டாக்கப்பயன்படுவது. பொருள் முதலோடும் ஒப்பிடப்படுவது எ-டு. பணம், மனித ஆற்றல்.

physicals- மெய்யீடுகள் பா. actuals.

pilot production - முன்னோடி உற்பத்தி: ஒரு புதிய பொருளை சிறு அளவில் உற்பத்தி செய்தல், இதை முன்னோடி எந்திரம் செய்யும்

pilot study - முன்னோடி ஆய்வு: சிறு அளவில் செய்யப்படும் அங்காடி ஆய்வு. சிக்கல்களைத் தவிர்த்து நிறைவை எட்டச் செய்யப்படுவது

plant - நிலைப்பகம்: 1) ஒரு நிறுவனத்தின் இடம். இங்கு அதன் உற்பத்தி நடைபெறுவது. 2) தன் செயல்களை நிறைவேற்ற. ஒரு தொழிலகம் பயன்