பொலிவு
101
"அதுசரி, இப்பத்தான் மதுவிலக்கு இருக்கே..."
"ஆமாம்; மதுவிலக்கு இருக்குது, கடை வச்சி விற்கக் கூடாது—அவ்வளவுதான்..."
"அப்படின்னா...?"
"இப்ப 'கடை'க்கு மனுஷாள் போறதில்லே. 'கடை' மனுஷாளைத் தேடிக்கிட்டுப் போகுது; திருட்டு வியாபாரம் நடக்குது. முன்னாலே பகிரங்கமா வியாபாரம் செய்தான்; இப்ப, அதுவே, இரகசியமா நடக்குது. இப்பத்தான் முன்னையப்போல மூணு மடங்கு இலாபம். எங்க மில்காரன்கிட்டே அவன் வாரானே, எதுக்கு? எல்லாம் இதுதான்!"
"அப்படியா சமாசாரம்—ஆனா, அதெல்லாம் பெரிய இடத்திலே. தலைகாஞ்சதுக எங்கேயிருந்து வாங்கப் போகுதுங்க...அவங்களைப் பொறுத்தவரையிலே மதுவிலக்கு நிஜமாத்தான் இருக்கு..."
"அதுவும் தப்புதான்! அவங்க மட்டும் என்னவாம்! பொதியன் பாட்டில் சரக்கு விற்கிறான்; மத்தவன், மட்டம் விற்கிறான்..."
"மட்டமா...?"
"காச்சினதுடா; இப்ப அந்த வியாபாரம்தான் கன ஜோர்...நானே மாசத்திலே ஒரு அஞ்சு பத்து அதுக்குத் தொலைக்கறேன்."
"அடப்பாவி..."
"என்ன நய்னா கவனிக்காமலே போறே? என்னதான் வாழ்வு ஒசந்துட்டாலும் இப்படி நட்டுப் பொட்டிட்டுக்கக் கூடாது..." என்று ஆரம்பித்த மூலைக்கடை முத்தையன், "அதுக்கென்ன அண்ணேன்!" என்றான்.
"ஆசாமி! 'டாப்' திறந்துடறேன்...நம்மைச் சரியாவே கவனிக்கிறதில்லே...என்னடா எஜமானுக்குத்தான் உன்மேலே உசிராமேன்னு நம்ம ஜதைக்காரனுங்க பேசரானுங்க. இங்கே சரிவர நம்மைக் கவனிக்க ஆள் கிடையாது. எவ்வளவு கண்ணுங் கருத்துமா நான் கவனிக்கிறேன், ஒரு