பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

புதிய

"எஜமான்! இது எனக்குப் பிடிக்கலே. நீங்களா பார்த்து எத்தனையோ தான தர்மம் செய்யறிங்க. அதுசரி, சிவராத்ரி உற்சவம் சிறப்பாகச் செய்திங்க. ஊர் ஜனங்களெல்லாம் 'ஐயாவோட,' தரும குணத்தைப் பாராட்டினாங்க, அது நமக்குச் சந்தோஷம் கொடுக்குது. ஆனா, பணத்தை வாங்க முடியாமெ ஏமாந்துவிட்டுப் போட்டாங்கன்னு ஒரு சின்ன சொல்லு கேட்கப்படாதுங்க—அது நமக்குப் பிடிக்கல்லே. சரி, அவளை நாயேன்ன வேணாம்; பேயேன்னவாணாம், மிரட்டிக் கேட்கவேணாம், வேறு வகையிலே அந்தப் பணம் வந்து சேர வழி செய்யலாமெல்லோ."

"வேறே வழி என்ன கண்டுபிடிச்சிருக்கே..."

"சரின்னு சொல்லுங்க எஜமான்! அவளை உதைச்சி பணம் சம்பாரிக்க வைச்சிக் கடனைத் திருப்பிக் கட்டுடின்னு கேட்கறேன்..."

"அப்படீன்னா...?"

"அவளை 'டிராமா' ஆடச் சொல்றது; அதிலே பணம் வருதில்லே, நம்ம கடனை எடுத்துக் கொள்றது."

"அவ 'டிராமா' நடந்தாத்தானே."

"நாம நடத்தறது."

வேலப்பன், 'டிராமா' கண்ட்ராக்டரானான்—கடனை வசூலிக்கத்தான். முதல் நாடகத்திலே ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்ட மூன்று நாடகம் தேவைப்பட்டது. நாலாவது நாடகத்தின்போது, தமயந்தி "ஏதோ உங்களோட தயவு..."என்று கொஞ்சிப் பேசி, தாராசசாங்க நாடகத்திலே அவன் கண்ட அருவருப்பை ஆனந்தமாக்கி விட்டாள். செல்லி விடைபெற்றுக் கொண்டாள். தமயந்தி முத்தையனுக்கு 'அண்ணி' ஆகிவிட்டாள். வியாபார ஸ்தலமே தமயந்தியின் வீடு என்றாகி விட்டது. வேலப்பன் ஒருகாலத்தில் கிராமத்தில் இருந்தவனென்ற அறிகுறியே மறைந்துவிட்டது. எப்போதும் கண்சிவந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தமயந்தி "அவர் வேண்டாமென்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்," என்று டிராமா கண்ட்ராக்டர்களுக்குக் கூறி, புதிய