பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 105 அந்தஸ்துக்குச் சென்றுவிட்டாள். ஊர் மக்களிடம் தான் அவள் முன்புபோல, தாராசசாங்கம், சாரங்கதாரா, அல்லி அர்ஜுனா, சந்திரமதி ஆகியவைகளை நடித்துக் காட்டவில் லையே தவிர வீட்டில் எல்லாம்தான். "ஆறு பவுனாம்- என்று கூறி அலட்சியமாகச் செயி னைத் தமயந்தியிடம் தருவான், வேலப்பன். 'ஆறோ நூறோ! உங்கள் அன்புதான் எனக்குப் பெரிது. இந்த நகை யாருக்கு வேண்டும்' என்று நாடகமாடாக் குறையை ஓரள வுக்கு நீக்கிக் கொள்ளும்முறையில் பேசுவாள். 'அட, அட! அதென்ன அப்படிப் பார்க்கறே' என்று வேலப்பன் கேட்க வேண்டிய கட்டம் நடக்கும்-உஹும் என்பாள்-அடி அம்மா - என்பாள், இப்படி நவசர நாடகம் நடைபெற்ற 11டி இருக்கும். அவளை தமயந்தி, நாடக வாய்ப்புக் கிடைக்காமல், நல்ல ஒரு சம்பந்தமும் கிடைக்காமல் திண்டாடியபோது ஏறெடுத்துப் பாராமல் இருந்தவர்களும், ஏளனம் பேசியவர் களும், வேலப்பனுடன் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, அவளிடம் 'ஆசை' கொள்ள ஆரம்பித்தார்கள். நல்லாத்தான் இருக்காடா! நாற்பது வயசுன்னு நாம நையாண்டி செய்தா போதுமா? நேத்து சாயரட்சை அவ, நவக்கிரகம் சுத்தறதுக்கு வந்தா கோயிலுக்கு! எப்படி இருக் கிறா தெரியுமா? இருவது இருவத்தைஞ்சிதான் மதிப்புப் போடுவாங்க வயசு- ஐம்பது அறுபதுன்னு கேட்டாலும் ஆகட்டும்னு சொல்லிப் போடுவாங்க, அப்படி இருந்தா' என்று கூறி ரசிக்க ஆரம்பித்தார்கள். பல நாடகக் காண்ட்ராக்டுகள் எடுத்து எடுத்து நொடித்துப் போனவர், பாலு வாத்தியார். ஆயிரக்கணக்கிலே பணத்தை நாடகக் காண்ட்ராக்ட்டிலே பாழாக்கி விட்ட பிறகு அவருக்குக் கிடைத்த பட்டம் அந்த என்பது. வாத்தியார் நாட்டிலே கீர்த்தியுடன் உள்ள நடிகர்கள் ஒவ்வொரு வரும், பாலு வாத்தியாரால்தான் முதலில் கைதூக்கி விடப்