பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 புதிய பட்டவர்கள் என்று பெயர் உண்டு. அவர் அந்தப் பழைய சம்பவங்களைக் கதை கதையாசச் சொல்லுவார். தன்னாலே முன்னுக்கு வந்தவன்; பிறகு தன்னை மதிக்காமல் நடந்து கொண்டால், உடனே வேறு ஒரு ஆவைத் தயார் செய்து, அவனுக்கு நிறைய விளம்பரம் கொடுத்து, மெடல் கொடுத்து, மாலை கொடுத்து, போட்டிக்குக் கிளம்புவதிலிருந்து, மற்றும் கொட்டகை கிடைக்கா மலிருக்கும்போது, எப்படித் தந்தி ரம் செய்து கொட்டகையைப் பெறுவது என்பது வரையிலே அவர் சுவைபட எடுத்துக் கூறுவார். இடையிடையே இருமல் வரும். அதைமட்டும் பொறுத்துக் கொள்ள வேண்டும். தமயந்திக்கும் வாத்திரியாரிடம் மதிப்பு உண்டு. தமயந்திக்கு, வேலப்பனிடம் தொடர்பு ஏற்பட்ட தாலே ஒரு புது 'மவுசு' வந்திருப்பது தெரிந்து, தனக்காக ஒரே ஒரு ஸ்பெஷல் டிராமாவுக்கு மட்டும் தமயந்தி ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 'வாத்தியாரே! அதென்ன எனக்கு நீங்க இவ்வளவு சொல்லணுமா? முதல் முதலிலே நான் மாதவி வேஷம் போட் டேனே, அன்னக்கி, என் காலுக்கு உங்க கையாலேதானே 'சதங்கை' கட்டி ஆசீர்வாதம் செய்திங்க. அதை எல்லாம் நான் எப்படி மறந்துடுவேன். மன "செய்த நன்றியை மறக்காதவர்களைத்தான் ஷான்னே சொல்லியிருக்கு தமயந்தி. உனக்கும் தெரியுமே. ஓரடி வீராசாமி பாடுவானே ஒரு பாட்டு, கவனமில்லே, தோடியிலே, "நன்றி செய்தாரை என்றும் மறவாதே நாயினும் கேடுகெட்டு நாசமாகாதேன்னு...' 'ஆமாம். ரொம்ப நல்லாப் பாடுமே வீராசாமி, இப்ப எங்கே, பேரே காணோம்?*