பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொலிவு

107

"எப்படிப் பேர் நிலைக்கும்? பாட்டுத்தான், செய்த நன்றியை மறக்காதேன்னு; செய்கை அப்படி இல்லையே! அதனாலே ஆசாமி ரொம்ப 'டல்'லாயிட்டான். இப்பத்தான் மறுபடியும் புத்தி வந்து, காலிலே வந்து விழுந்தான்; செய்ததை மறந்துடுங்கன்னான். இப்ப நான் உன்னை ஒரு ஸ்பெஷலுக்கு வற்புறுத்திக் கூப்பிடுவதுக்கு இதுவும் ஒரு காரணம். அந்தப் பயதான் ராஜபார்ட் தெரியுதா! அவனை ஒரு மடக்கு மடக்கோணும்—ஆசாமி, அசந்து நிற்கணும்...அப்படி கன ஜோரா இருக்கணும்..."

"உங்க ஆசீர்வாதம்! ஆனா அவன் 'தோடி' பாடி ஜனங்களை ஏமாத்திப் போடுவான்..."

"அட, நீ மோகனத்திலே பிடி...பய, சுருண்டு கீழே விழறான் பாரு...உனக்கு இந்த இரகசியம் தெரிஞ்சு இருக்கட்டும்—பயலுக்கு இப்ப குளறுவாயாயிட்டுது—ள வெல்லாம் ல தான்....ழாவே நுழையாது.."

"எனக்கு எப்பவுமே பயம் கிடையாதே. அப்பேர்ப்பட்ட ஆர்ப்பாட்ட ராஜபார்ட் அய்யா குட்டியோட தூக்குத்தூக்கிபோட்டு யாராலும் சமாளிக்கவே முடியாதுன்னு சொன்னாங்களே, கவவமிருக்கா வாத்தியாரே? 'காட்பாடியிலே சுருளி மலை மேலே உருளும் இருளனவன்...'என்கிற பாட்டுபாடி, 'கள்ளபார்ட்' செய்தேனே."

"பய, மூஞ்சி செத்துப் போச்சே."

"அதனாலே, எனக்கு இந்த ஓரடி, ஒன்பதடி எல்லாம் பத்திக் கவலையில்லே...இது இருக்கே, என்னோட வீட்டுக்காரு, உசிரு என் மேலே. அது வந்ததிலிருந்து நான் அய்யனார் சாட்சியா, மனசாலேகூடத் தப்பா நடந்ததில்லே. அது, டிராமாவுக்குக்கூடப் போகப்படாது—தலை இறக்கமா இருக்குன்னு, ஒரே பிடிவாதம் பிடிக்குது. அதை மட்டும் சரிப்படுத்திவிட்டாப் போதும்! ஒரு நாலு நாளைக்குச் சாதகம்; மூணு நாள் ஒத்திகை இருந்தாப் போதும்..."

"கொளுத்திப்பிடலாம் போ."