பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 109 போது, அவளால் எதையும் சாகடிக்க முடியவில்லை--ஏற் கனவே எல்லாம் செத்துக் கிடந்த நிலை. என்பது. சடையாண்டியும், செல்லியின் திருமணம் இனிச் செய்து தீரவேண்டிய ஒரு கடமை, சடங்கு, ஊர் உலகத்துக்காகச் செய்தாக வேண்டிய ஏற்பாடு என்றுதான் கருத முடிந்தது. காய்ச்சல் வந்தவனுக்குத் தெரியும், வாய்க் கசப்பு இருப்பதும், எதைச் சாப்பிட்டாலும் பிடிக்காது என்பதும். என்றாலும், கஞ்சி குடித்துத் தீரவேண்டி இருக்கிற தல்லவா! செல்லிக்கும் ஒரு கலியாணம் செய்துதானே ஆக வேண்டும் என்று சடையாண்டி எண்ணியது, அதே முறை யிலேதான். "அவனுக்கா? எனக்கு இஷ்டமில்லை. எனக்கு அவன் ஏற்றவனல்ல; அவனோடு என்னாலே குடித்தனம் செய்ய முடியாது” என்று கூறி, பெற்றோரை எதிர்த்துப் போராடியாவது, தன் மனதுக்கு இசைந்தவனை, தன்னை உண்மையாகக் காதலிப்பவனைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்று கூறும் நிலையில் இல்லை. செல்லி வேலப்பன் 'எனக்கு அவள்தான் வேண்டும்' என்று இருந்தால்தானே போரிட: வேலப்பன் எங்கே இருக்கிறான்? சிறையிலிருந்தாலும் பரவாயில்லை. ஏதோ காலக் கோளாறு கயவர் சூது-ஆத்திரத்தால் அறிவு இழந்த நிலை - இப்படி ஏதேனும் ஒரு சமாதானம் செய்துகொள்ள முடியும்.-அவன் தான் வேண்டும் என்று வ:தாட முடியும். வேலப்பன் சிறை யில் இருப்பவன்மட்டுமல்ல-எல்லா நற்குணங்களும் சிதைத்து போய் உள்ள நிலையில் அல்லவா இருக்கிறான்! சாரு போய் விட்டது; சக்கைதானே மிச்சம்? தன்னை மணந்துகொண்டு, 'வாழ்வு' நடத்த முடியாத அளவுக்கு, நற்குணங்கள் யாவற்றினையும், நல்ல நினைப்பி னையும்கூட நாசமாக்கிக் கொண்டுவிட்டவன், வேலப்பன். எனவே, இனி அவனை எதிர்பார்ப்பதும் வீண் - அவனுக்காக ஏங்கித் தவிப்பதும் அவசியமற்ற செயல்: உள்ளத்தில் புகுந்து