மகன்
11
போட்டயோ தெரியல்லே...என் மவளோட கண்ணு உன்னைத்தானே சுத்திச் சுத்தி வளையம் போடுது...காலா காலத்திலே முடியணுமே..."
"இது என்ன விபரீதம். நான் ஒருவிதமான கெட்ட எண்ணமும் இல்லாமத்தான் பழகறேன்...காவேரியும் அது போலத்தான்..."
"அடப்பாவி! என்னா இப்படி ஓர் இடியைத் தூக்கிப் போடறே. அந்தப் பொண்ணு உன்னைப் பார்க்கற பார்வையும், பேசற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும் ஊரே தெரிஞ்சிக்கிட்டிருக்குது. தொரெக்கேகூடத் தெரியும்...அப்படித்தான் நான் எண்ணிக் கொண்டு இருக்கறேன்."
"ரொம்ப தப்பு...நான் அந்த விதமான பேச்சே பேசினது கிடையாது—சத்தியமா..."
"பேசணுமா...ஏண்டா! ஒரு வயசுப் பொண்ணை எதிரே உட்கார வைச்சிகிட்டு, இளிச்சிக்கிட்டு இருக்கிறயே..என்னமோ சித்திரம் தீட்டறேன்னு...அது எதுக்காம்."
"காவேரியோட அழகு அக்கா! என்னைப் படம் போடச் சொல்லுது..."
"சொல்லுண்டா சொல்லும்...உன் கண் அழகு யாருக்கு உண்டு...உன் கன்னம் மாம்பழம், உடம்பு தங்கம்னு இன்னும் என்னென்ன இழவோ பேசி அந்தப் பெண்ணோட மனசை மயக்கிவிட்டு, இப்ப இப்படிச் சொல்றயே...நியாயமா...சொக்கலிங்கம்?"
"நான் இப்பத்தான் கேட்கறேன். வெட்கத்தை விட்டே கேட்கறேன். என் மகளைக் கட்டிக்கொள்ள கசக்குதா—ஆப்பக்காரி பொண்ணுன்னு சொல்லுவாங்களேன்னு தோணுதா? நாலு எழுத்துப் படிச்சதாலேயே என்னைப் பாத்தா கேவலமாத் தோணுதா..."
"அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. நான் மட்டும் என்ன, பெரிய மிராசுதாரன் பிள்ளையா?