பொலிவு
111
யின் நிலைமை இருந்தது! அதைச் சாதகமாக்கிக் கொண்டு வேகமாக மேல்வாரியான படம் தீட்டிவிட்டான். இனி அதற்கு உயிரூட்டும் வகையில் வேலை செய்ய வேண்டும்.
இரவு பகலென்று பாராமல் வேலை செய்தான்—ஓவியம் மிக அருமையாக அமைந்து விட்டது. நண்பர்கள் திறமையைப் பாராட்டினர். அவனோ உண்மை உருவத்தை எண்ணிப் பூரித்துக் கொண்டிருந்தான்.
'மேகங்கள் அலைவதுகூட அப்படியே தெரிகிறது பார்!' என்று ஓவியத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவர் நிபுணர்கள்.
அவனோ, அந்தக் கண்களிலே கப்பிக் கொண்டிருக்கும் துக்கத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருந்தான்—கவலையுடன்.
'அட, இந்த ஆட்டுக்குட்டி, கிராமத்திலே நல்ல மேய்ச்சல் கிடைப்பதால் எவ்வளவு கொழுகொழு என்றிருக்கிறது பார்' என்று பாராட்டிவிட்டு, 'இதோ' இந்தக் குட்டிக்கு மட்டுமென்ன, வெய்யில் என்றும் மழை என்றும் பாராமல், கால் கடுக்குமே கை வலிக்குமே என்று கவலைப்படாமல், ஓடி ஆடி பாடுபல படுவதாலே உடற்கட்டு வளமாக இருக்கிறது—இளமையும் எழிலும் சேர்ந்தவுடன், சிற்பி செதுக்கிய செப்புச்சிலைபோலத் தெரிகிறது' என்று மற்றவர்கள் புகழும்போது, ஓவியனுக்கு, ஓவியத்தின் பிடியிலும் அகப்படாதிருந்த கவர்ச்சி கண்முன் தோன்றிற்று. எல்லோரும் ஓவியத்தைப் பார்த்து இவன் திறமையைப் பாராட்டிக் கொண்டிருந்தனர். அவனோ அவளையே எண்ணிக் கொண்டிருந்தான்.
கிராமங்கள் பலவற்றுக்குச் சென்று அவன் தன் கருத்திலே மகிழ்வூட்டிய எத்தனையோ காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறான்—பச்சைக் கிளிகள் பறந்து செல்லும் காட்சி, பால் சுவைக்கும் கன்றினை அன்புடன் தாய்ப்பசு நாவினால் தடவிக் கொடுக்கும் காட்சி, உழவுத் தொழிலிலே உள்ள பல்வேறு வகையான காட்சிகள், கிராமியப் பெண்களின் குறும்புப் பார்வை, உழவனின் உடற்கட்டு, வெள்ளை உள்ளம்