112
புதிய
கொண்டவன், புதுமைப் பொருளை விறைத்து விறைத்துப் பார்ப்பது ஆகிய பல காட்சிகள் அவனிடம் சிக்கி, ஓவியமாயின—ஆனால் இந்தக் கட்டழகி—திரையில் மட்டும் தங்கிவிட வேண்டியவள் என்று வடிவேலன் தீர்மானித்தான்.
வடிவேலன் வசதியான குடும்பத்தினன்—வயதான தாயாருடன், தன் பூர்வீகச் சொத்தைப் பாழாக்கிக் கொள்ளாமல் ஆடம்பரமின்றி வாழ்ந்து வந்தான். ஓவியத்திலே அவனுக்கு நிரம்ப ஆர்வம். அதற்காக அவன் கிராமியக் காட்சிகளில் மனம் செலுத்தத் தொடங்கி கிராமத்தினிடமே கவர்ச்சி பெற்று, இப்போது கிராமக் கட்டழகியிடம் மனதைப் பறிகொடுத்தான்.
வடிவேலனுடைய தாயாருக்கு, தன் மகன் ஒரு நாகரிக நாரிமணியை மணம் செய்துகொண்டு, பார்ப்பவர்கள் பாராட்டத்தக்க விதமாக வாழ வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். அதற்கான முயற்சிகள் பலதடவை செய்தார்கள்—எல்லாம் ஏமாற்றத்திலேதான் முடிந்தது—காரணம், அந்த அம்மையார்மீது நெடுங்காலத்துக்கு முன்னாலே ஏற்றி வைக்கப்பட்ட கறைதான். எனவே வடிவேலன், கிராமத்துக் கட்டழகியைப் பெற விரும்புகிறான் என்று தெரிந்து, முதலிலே, இதுதானா என் மகனுக்கு என்று வருத்தப்பட்டபோதிலும், ஏதோ, இதுவாவது மங்களகரமாக முடியட்டும் என்று எண்ணிக் கொண்டார்கள். பெண் பார்த்து வரவும், ஏற்பாடுகள் செய்யவும் தானே கிளம்பினார்கள்.
இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாள், 'பாவம்' இந்த இடம் பச்சென்று இருக்கிறது. பளபளப்பாகவும் இருக்கிறது; பணம் படைத்தவனாகவும் இருக்கிறான்; கிழவனல்ல, அழகாகவும் இருக்கிறான். என்றாலும் பட்டணத்துப் படாடோபம் இல்லை; இந்த இடத்தில் வாழ்க்கைப்பட்டு சீமாட்டி போல வாழ்ந்தாலாவது, செல்லி இழந்துவிட்ட சந்தோஷம் ஓரளவுக்குத் திரும்பிவரக்கூடும் என்ற எண்ணத்திலே, சடையாண்டி, திருமணத்துக்குச் சம்மதமளித்தான்.
ஊரார் பார்த்துப் பரிதாபப்பட வேண்டிய நிலைமையில் அப்பா நம்மாலே ஆக்கப்பட்டுவிட்டார். என் கதி என்ன