பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 புதிய இவருக்கு வந்து வாய்ப்பது என்றால், எனக்கு என்ன சொல் வது என்றே புரியவில்லை. களத்துமேட்டுக்கு ஓடுவதும், முழங் காலளவு சேற்றில் இறங்கி நடப்பதும், மரத்தில் ஏறிக் காய் பறிப்பதும், மடுவில் நீந்திக் குளிப்பதுமாக இருந்து வந்த என்னை, இங்கே, காலிலே ஜான் உயரத்தில் பூட்சும், கையிலே ஒரு அலங்காரப் பையும், கண்ணுக்குத் தங்கக் கம்பி போட்ட கண்ணாடியும் போட்டுக் கொண்டு, முக்கால் சிரிப் பும், கால் பேச்சும் கலந்தளித்துவரும் நாகரிகப் பெண்களின் நடுவில் கொண்டு வந்து ஏன் நிறுத்தினார் என்றே தெரிய வில்லை. அவர் மேஜை மீது அடுக்கடுக்காகப் புத்தகங்கள்--- ஒரு வரியும் எனக்குப் புரியாது... ஆனால் என்னிடம் அவர் காட்டும் அன்பைக் கண்டாலோ, அவருடைய காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் போலத் தோன்றுகிறது. கதை ஒன்று கேட்டிருக்கிறேன், சின்ன வயசில், வேண்டு மென்றே ஒரு ராஜா, தன் நாட்டிலே இருந்த பிச்சைக்கார னுக்கு, ஒருநாள் ராஜா வேலை கொடுத்து, அதை அவன் எப்படி எப்படி உபயோகப்படுத்துகிறான் என்று வேடிக்கை பார்த்தானாம்—அதுபோல இது ஒரு வேடிக்கையோ, எவ் னவோ என்று எண்ணிக் கொண்டு, அதற்கு ஏற்றபடியே நடந்து கொண்டு வந்தாள். பசு கிராமத்துக் கட்டழகியின் கவர்ச்சி, நகரத்துச் சூழ் நிலையில் மெள்ள மெள்ளத் தானாகவே மாறிக்கொண்டு வர லாயிற்று. ஒருவரும் கவனிக்கக்கூட முடியவில்லை. மைக்குப் பக்கத்திலே இந்த 'இளமை' உலாவிக் கொண்டி ருந்த காட்சிக்கும், பங்களாவில் ஆள் நடமாட்டம் இல்ல மல், அந்தஸ்தைக் கட்டும் பொருள்களுக்கும் மத்தியில் செல்லி இருந்த காட்சிக்கும் வித்தியாசம் கணப்பட்டது. அதைக் கூனித்தறிய வடியேலனால் முதலிலே முடியாமற் போனதற்குக் காரணம்:'அஎன் அவளிடம் செ க்கிக் கிடந்தது தான்! மடுவிலே இறங்கி, மகிழ்ச்சியுடன் நீந்தி விளையாடு வாள், கிராமத்தில்; வேறு பெண்களும் குளிக்க வருவார்கள்- விளையாட்டு பலமாகிவிடும்; தன்ணீரை வாரி வாரி இறைத் துக் கொள்வார்கள். யார் முதலிலே வெளியே தலையைத்