பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

புதிய

தத்ரூபமா எழுதியிருக்கான்...இவ சொல்றா, 'இது என்ன படம், நெருப்பைப் போயி படமா எழுதவேணுமா'ன்னு கேட்கிறா? இப்படி என்னைக் கேட்ட மாதிரி, அவனைக் கேட்டிருந்தா, தலை தலைன்னு அடித்துக் கொண்டு சன்யாசம் வாங்கிக்கொண்டு விடமாட்டானோ வடிவேலன்.'

இப்படி எல்லாம் பேசுவார்கள் நாகரிக நங்கைகள்—சில வேளைகளில், செல்லத்தின் செவியில் படும்படிகூடப் பேசுவார்கள். கோபமாக இருந்தது. இருந்து? பொறுத்துக் கொண்டாள். நாம் இங்கு வந்திருப்பது, இதுகளிடம் நல்ல பெயர் வாங்க அல்ல; அவருக்கு அன்புதர—அதை நாம் வஞ்சனையின்றிச் செய்து வருகிறோம்—அவர் நம்மிடம் ஒரு குறையும் காணவில்லை; எப்போதும் போலத்தான் பிரியமாகப் பேசுகிறார்; அதுபோதும் நமக்கு என்று திருப்தி அடைந்தாள்.

பிரியமாகப் பேசுகிறார் என்று அவள் எண்ணிக் கொண்டதிலே தவறு இல்லை. ஆனால் எப்போதும் போல அல்ல! அதை அவளாலே அவ்வளவு எளிதாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

"ஏன் செல்லா! பீச்சுக்கு வருவதிலே உனக்கு என்ன சங்கடம்? அந்த இடம் என்ன, புலி கரடி உலவுகிற இடமா என்ன?" என்று ஆரம்பமாயிற்று. அதிருப்திப் படலம் எது வரையில் சென்றது என்றால் "நான் போயிட்டு வருகிறேன் பீச்சுக்கு; ஊர்மிளா வந்தால் சொல்லு, நான் பீச்சிலே இருப்பேன்" என்று சொல்லி விட்டுத் தனியாகக் கடற்கரை செல்லும் அளவுக்குச் சென்றது.

ர்மிளா, வடிவேலனைப் பெற வேண்டுமென்பதற்காகவே, வெளியே கிளம்பும் போதெல்லாம், குறைந்தது ஒரு மணி நேரம் கண்ணாடியும் கையுமாக ஒரு வருடம் இருந்தவள். கல்லூரியில் 'ஆங்கில டான்சு'க்கு அவளுக்குத்தான் மெடல் கிடைத்தது. அவளிடம் வடிவேலனுக்குக் காதலோ என்று சந்தேகம் பிறந்தது, செல்லிக்கு; கோபமாகக்கூட இருந்தது. பிறகோ அவர் எது செய்தாலும் பொறுத்துக்