124
புதிய
"அவசரப்பட்டு மாட்டிக் கொள்வானேன்—இப்போது அவதிப்படுவானேன்" என்று ஊர்மிளா கேட்கிறாள்.
"என்னைச் சித்திரவதை செய்யாதே! எனக்கு ஒரு மாதிரி மனமயக்கம்; கிராமத்து மீது மோகம். அந்த நிலையில், செல்லி என் கண்ணுக்குத் தங்கப்பதுமை போலத் தெரிந்தாள்..."
"இப்ப மட்டும் என்னவாம்? நல்ல உடற்கட்டு? உழைப்புக்கு ஏற்றவள்."
"போதும், ஊர்மிளா! நான்தான் பெருந்தவறு செய்துவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனி என்ன செய்ய முடியும்? சனியனை விரட்ட முடியுமா. ஊருக்குப் பொய்த் தொலை என்று சொன்னாலும், நகர மறுக்கிறது...."
"எப்படிப் போவாள்? அவள் என்ன இலேசுப்பட்டவளா? அங்கே போனால், வெல்வெட்டு மெத்தையா போட்டு வைத்திருக்கு? வைக்கோற்போர்தானே...!"
அதற்குமேல் பேச்சு கேட்கவில்லை. வளையல்கள் ஒலித்தன! நாற்காலிகள் மோதின! ஊர்மிளா சிரித்தாள்! செல்லி கண்களைத் துடைத்துக் கொண்டு, சமையற்கட்டு பக்கம் சென்றுவிட்டாள். ஒரு மணி நேரம் கழித்து வடிவேலன் குளிக்கச் சென்றான், புதிதாக வந்த சினிமாவில் காதலர்கள் பாடும் பாட்டை மெல்லிய குரலில் பாடியபடி.
பெரிய இடத்திலே பெண்ணைக் கொடுத்துவிட்டோம். அடிக்கடி அங்கு போனால், பெண்ணின் மீதுள்ள ஆசையால் வருவதாக ஊரார் எண்ணிக் கொள்ள மாட்டார்கள். பசையும் ருசியும் உள்ள இடத்துக்குப் போய், கிழவன் ஒட்டிக் கொண்டான் என்றுதான் ஏசுவார்கள் என்ற எண்ணத்தால் சடையாண்டி மகளைப் பார்க்க வருவதில்லை. ஏதாவது 'விசேஷம்' நடக்கும்போது போய்ப் பார்க்கலாம் என்று இருந்துவிட்டான்.