மகன்
13
லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக்கொள்ள அருணகிரிதான். எதையும் அருணகிரியிடம் சொல்லித்தான் செய்து கொள்ளவேண்டும்; அவ்வளவு நாணயமாக நடந்து வந்தான்.
அருணகிரி துடிப்பது கண்டு, கதறிய சொக்கலிங்கத்தை டேவிட் சமாதானப் படுத்திக் கொண்டே, தன் கண்களையும் துடைத்துக்கொண்டார்.
"இனி இவனை அவனுடைய அப்பனிடம் சேர்த்து விட வேண்டியதுதான். என் காலம் முடிந்துவிட்டது சார்! இவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உங்களோட உதவிதான்...வேறே யார்...எனக்குத் தெய்வம்போல நீங்கதான்"...என்று மிகுந்த கஷ்டத்துடன் பேசிய அருணகிரியை டேவிட் சமாதானப்படுத்தியபடி இருந்தார்.
சொக்கலிங்கத்தின் தகப்பனாருக்குக் கடிதம் போடப்பட்டது; அவரும் வந்து சேர்ந்தார்.
"சடையப்பா! நாம் எவ்வளவு முயன்றாலும் இனி அருணகிரியைக் காப்பாற்ற முடியாது. டாக்டர் சொல்லி விட்டார். மனதைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்."
"என் மகனாகச் சொக்கன் பிறந்தானே தவிர, ஐயா! அருணகிரியோட மகனாகத்தான் வளர்ந்து வந்தான். வருஷத்துக்கு ஒரு தடவையோ, இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவையோ, வந்து பார்த்துவிட்டுப் போகிறோமே, அது தவிர மற்றபடி எங்களோட தொடர்பே அவனுக்குக் கிடையாது. சொக்கலிங்கத்தை இவ்வளவு நல்லபடியாக வளர்த்த புண்ணியமூர்த்தி அருணகிரி...அவனோட உதவி கிடைத்திராவிட்டால், என் மகன் கூலிக்காரனாத்தான் ஆகியிருப்பான்."
"சடையப்பா! உன் மகன் நல்ல படிப்பாளி...அவனாலே உன் குடும்பம் கட்டாயம் நல்லநிலை அடையும்...என்னோட இருந்துவிடச் சம்மதமானாலும் சரி...இல்லே,