இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
130
புதிய பொலிவு
கைக்குத் தடையா இருக்கவே மாட்டேன்—ஆனா, ஊர்மிளா வேண்டாமுங்க, உத்தமர்களோட அறிவை எல்லாம் கெடுத்துவிடுகிற காதலி வேண்டாமுங்க, நல்ல படிச்ச பொண்ணா பார்த்து, உங்களோட நாகரிகத்துக்கு ஏத்தவளாகப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு வாழ்ந்துகிட்டு இருங்க—ஒரு நாலு மாதம் தவணை கொடுத்தா போதுமுங்க...கருவிலே சிசுவோடு தற்கொலை செய்து கொள்ள மனம் வரவில்லைங்க, இல்லையானா நான் சின்னப் புள்ளையிலேயிருந்து விளையாடிக் கொண்டிருந்த மடுவிலே இப்பவும் தண்ணி இருக்குதுங்க. என்னாலே முடியும், உயிரை மாய்த்துக் கொள்ள..."
கோவெனக் கதறித் தலைதலை என்று அடித்துக் கொண்டு, அப்படியே வாரி எடுத்து செல்லியை மார்புற அணைத்துக் கொண்டு,
"செல்லி! செல்லி" என்று மட்டுமே கூறிக்கொண்டு நின்றான், வடிவேலன்.
அவன் தீட்டிய ஓவியம் புதிய பொலிவு பெற்றதுபோலக் காட்சி அளித்தது.
★