பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

ஏழை

வார்கள்—கோபித்துக் கொள்வதிலே பயன் இல்லை என்று மனதுக்கு ஆறுதல் கூறிக் கொள்வான்.

முயற்சியைக் கைவிடக்கூடாது என்று ஒவ்வோர் தோல்வியின்போதும் எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவன் பார்த்துமிருக்கிறான்; கேள்விப்பட்டும் இருக்கிறான். பணக்காரர் ஆன பலர், ஆவதற்கு முன்பு அறிவுத் திறமையுள்ளவர்கள் என்று புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதனை.

'மாடு மேய்க்கக்கூடப் பயன்படமாட்டாய். மண்டை முழுவதும் களிமண்தான் உனக்கு' என்று கணக்கு ஆசிரியர், ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லித் தலையிலே குட்டுவார், செல்லப்பன் என்பவனை. எல்லப்பனுடன் படித்தவன். இன்று செல்லப்பன் பெரிய புள்ளி. பணத்திலே புரளுகிறான். சேமியா வியாபாரத்தில் ஆரம்பித்து, செயற்கை வைர வியாபாரம் நடத்தி, இப்போது, செல்லப்பா கம்பெனி ஏற்றுமதி இறக்குமதி ஏஜண்டு என்ற பட்டம்பெற்று, பத்து இலட்சத்துக்கு அதிபதியாகிவிட்டான். வீட்டுக் கணக்குக்கூட அவனுக்கு, எல்லப்பன்தான் போட்டுக் கொடுப்பான், இப்போது செல்லப்பனுக்கு, அடுத்த வருஷம் அமெரிக்காவில் எத்தனை லட்சம் பன்றிகள் இருக்கும் என்ற கணக்கிலிருந்து அவைகளுக்கு எத்தனை டன் சோளமும் உருளைக்கிழங்கும் தேவை என்பது வரையில் கணக்குத் தெரியும் என்கிறார்கள்.

'எப்படித்தான் இவ்வளவு கணக்கையும் கற்றுக் கொண்டானோ, 'மக்கு' என்று பெயர் வாங்கிய செல்லப்பன்' என்று எல்லப்பன் வியப்படைகிறான்; விளங்கவே இல்லை.

"எல்லாம் நான் கொடுத்த தகவல். அதைப் பயன்படுத்திக் கொண்டு எனக்கு உரிய பங்கு கொடுப்பதாகச் சொல்லி நம்பவைத்து, முறைகளை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு, கடைசியில் எல்லாவற்றையும் அவனே சுருட்டிக் கொண்டு என்னை விரட்டியேவிட்டான்; ஈவு இரக்கமற்ற பாவி!" என்று முணுமுணுத்தபடி முடங்கிக் கிடக்கிறான் கந்தப்பன். அவனுடைய கந்தலாடையையும் தள்ளாடும் நடையையும் காண்டவர்கள், என்னமோ பிதற்று-