ஏழை
137
பெரிய இடம் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செல்லப்பன் பெற்ற பல வெற்றிகள் விளங்கிக் கொண்டிருந்தன. பட்டமரம் துளிர்விடச் செய்பவன், பாழ் வெளியைப் பழமுதிர்ச் சோலையாக்குபவன் என்று ஒருவனைக் கூறினால் அவன் ஓர் மாயாவி என்று அல்லவா கருத்து இருக்கிறது என்று பொருள். கெட்டுவிட்டது—விட்டு விட்டேன் என்று எவரேனும் ஒரு தொழிலைக் குறித்துச் சொல்லிவிட்டால், அந்த இடத்திலே செல்லப்பன் இருப்பான்—நான் நடத்திக் கொள்கிறேன் என்று கூறிட! நடத்தியும் காட்டுவான். அது எந்து வகையிலேயோ அவனுக்கு இலாபமாகத்தான் முடியும்.
என்ன செய்வானோ தெரிவதில்லை. கணக்கு பார்க்கும்போது இலாபம் இருக்கும். யாராரைப் பிடிப்பானோ, எப்படியெப்படித் திட்டமிடுவானோ எவருக்கும் விளங்காது. ஆனால், இறுதியில் வெற்றிபெற்றுக் காட்டுவான். இந்த முறை தொலைந்தான்! இதிலே சரியாகப் போய்ச் சிக்கிக் கொண்டான். மீளமுடியாது!—என்று ஊரே பேசும். நண்பார்கள் எச்சரித்துப் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் யாவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் விதமான முறையில் வெற்றிபெற்றுக் காட்டுவான்.
ஆறுமுகம், ஜாதகம் பார்த்து, முகூர்த்த வேளையில் 'கடைக்கால்' போட்டு அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பித்த இரும்புப் பட்டறை ஆறே மாதத்தில் மூடப்பட்டுவிட்டது. தாங்கமுடியாத நஷ்டம் மட்டுமல்ல, ஊர் எதிர்ப்பு அவ்வளவு ஏற்பட்டுவிட்டது. ஊராட்சி மன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. இங்கு கிடைக்கும் இரும்புச் சத்துக் கலந்த மண்ணை வெளிநாடுகளுக்கு அனுப்புவதுதான் நல்ல இலாபம் தருமேயொழிய, இரும்புப்பட்டறை அமைத்துவிடுவது தனிப்பட்ட ஆறுமுகம் இலாபம் அடிக்கத்தான் பயன்படும். ஆகவே ஊராட்சி மன்றம் இந்த ஏற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது என்று ஒரு தீர்மானமும், இரும்புப் பட்டறை ஏற்படுத்தியதால், இதுவரையில் உழவுத்தொழிலிலே ஈடுபட்டிருந்தவர்கள் அதைவிட்டுவிட்டுத்