140
ஏழை
கட்டிடத்திற்கு முதலில் வண்ணம் அடித்துக் காட்டுங்கள்' என்று செல்லப்பன் கூறினான். கம்பெனிக்காரர் பெரிய கட்டிடம் எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? தாங்கள்தான் அதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். பெரிய மனது வைத்து, செல்லப்பன் ஆலைக் கட்டிடத்தைக் காட்டினான். வண்ணம் செலவின்றிக் கிடைத்தவிதம் அது.
ஆலையை வாங்குவது என்ற முடிவுக்குச் செல்லப்பன் வந்தபோது, தன் உறவினரில் சற்றுச் சரியானவராக உள்ளவரைப் பிடித்து, "ஊராட்சி மன்றத்தைக் கண்ட பயல்களிடம் விட்டுவிட்டீர்கள். அது பெரிய ஆபத்தாக முடியும். யாராரோ ஊராட்சி மன்றத்திலே நுழைந்துகொண்டு கண்டதற்கெல்லாம் வரி போடுவார்கள். நத்தம் புறம்போக்கு பஞ்சாயத்துக்கு என்பார்கள். காலாகாலமாக உம்முடைய மேற்பார்வையில் புறம்போக்கு இருக்கிறது. மானாவாரி பயிர் செய்து ஏதோ கிடைக்கிறது. அது அவ்வளவும் பாழாகும். ஆகவே, ஊராட்சி மன்றத்தை விட்டு விடாதீர்கள். நம்மவர்களாகப் போட்டுக் கைப்பற்றவேண்டும். இந்த ஊருக்கு ஒரு கலெக்டர் வருகிறார், கவர்னர் வருகிறார் என்றால், ஊராட்சி மன்றத் தலைவரைக் கூப்பிட்டுப் பேசுவாரா, உம்மைக் கூப்பிடுவாரா? ஓரத்தில் ஒதுங்கி நீர் நிற்க வேண்டும். உம்மிடம் கடன்பட்டவன், கவர்னருடன் கைகுலுக்குவான். செச்சே! இப்படி இருக்கலாமா? என்ன பிரமாதமாக செலவாகிவிடப் போகிறது! உமக்கு மனம் இல்லாவிட்டால், என்னிடம் விட்டுவிடும்; நான் பார்த்துக் கொள்கிறேன் செலவு அவ்வளவும்" என்று தூண்டினான். ஊராட்சி மன்றம் செல்லப்பன் கைக்கு அடக்கமாகிவிட்டது. பழைய தீர்மானம் போட்டவர்கள், வெளிநாட்டு வியாபாரிகளிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டவர்கள் என்ற புகார் கிளப்பப்பட்டது. பத்தே ரூபாய்தான் செலவு இதற்கு! தீர்மானங்கள் 'ரத்து' செய்யப்பட்டன. ஆலைக்கு ஏற்பட்ட ஊர் எதிர்ப்பு ஒழிந்துவிட்டது. அடிக்கடி புதிய புதிய ஆட்களுடன் செல்லப்பன் ஆலைப்பக்கம் வரலானான். ஆலை பெரிதாகப்