பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

144 ஏழை பன் கனிவுடன் பேசுகிறான். கேட்கும்போதே எல்லப்பனுக் குத் திகில் ஏற்படுகிறது. பயத்துடன், நடுங்கும் குரலில், "ஆபத்தான காரியம்! பாபம்கூட!* என்கிறான் எல்லப் பன். "பைத்தியம், பயப்படாதே! நான் எல்லா ஏற்பாடு களையும் செய்து வைக்கிறேன். ஒரு ஆபத்தும் வராது." “பழக்கமற்ற காரியம். மனம் இடம் கொடுக்கவில்லை! கள்ளக் கடத்தல் பெருங்குற்றம்..." "பிடிபட்டால்தானே! பீதிகொள்ளாதே! நீ செய்ய வேண்டியதெல்லாம் என்ன? நான் குறிப்பிடும் இடத்துக்குச் செல்லவேண்டும்; சரக்குக் கொண்டு வருவார்கள்; பெற்றுக் கொள்ளவேண்டும்; நான் குறிப்பிடும் இடத்தில் வைத்துவிட வேண்டும். அவ்வளவுதானே. "அதிகாரிகளின் கழுகுப் பார்வையிலிருந்து என்னால் தப்ப முடியாதே.' “கழுகுகளுக்கு இறைச்சித் துண்டுகள் போடப்படும். என்ன விழிக்கிறாய்? ஏற்பாடு இருக்கிறது அதற்கெல்லாம். நிலைமை மோசமாகாது. சிறிதளவு துணிவும் புத்திகூர்மை யும் வேண்டும். உனக்கு மேங்கா தெரியுமல்லவா?" "போலீசில்கூடத் தனிப் பதக்கம் கொடுத்தார்களே, சுள்ளக் கடத்தல் பற்றிய துப்புக் கண்டுபிடித்து, அதிகாரி களிடம் சுயவனைக் காட்டிக் கொடுத்துக் கடமையைச்செய்த காரிகை என்று. அவர்களைத்தானே சொல்லுறொய்? "அதே ஆசாமிதான்! அடேயப்பா! பத்திரிகைகளிலே படங்கள், பாடல்கள், பாராட்டி..." கடி 'துணிந்து கடமையாற்றினார்களே! அறுபது காரங்களாமே, கள்ளக் கடத்தல்காரன் கொண்டு வந்தவை' 'ஆமாம்! அறுபதுதான் கொண்டுவரச் சொல்லியிருந் தேன்; பறிமுதல் செய்து விட்டனர். மூன்றாயிரம் ரூபாய் நஷ்டம் ..