பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

ஏழை

கிளம்பினர். இங்கு வந்து இறங்குமுன்னம், மேங்கா, பரபரப்புடன் அதிகாரியை அணுகி, இரகசியம் கூறுகிறாள். 'சிங்காரத்தின், கைத்தடியில் கடிகாரங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. கள்ளக்கடத்தல். கண்ணால் கண்டேன். என் காலணியால் அடிபட்டிருக்க வேண்டிய கயவன்! கள்ளக் கடத்தல் பேர்வழிக்கு, வாய்த்துடுக்கு எவ்வளவு தெரியுமா! நீங்கள் பார்த்திருக்க முடியாது. தற்செயலாக, ஓட்டல் சென்றேன் சாப்பிட! வெறியன் என்னிடம் நெருங்கி வந்தான், சரசமாட! சீறினேன்! தடியை ஓங்கினான்! மரியாதையைக் கெடுத்துவிடத் திட்டமிட்டேன, பயல் தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான், கப்பல் தட்டிலே ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அவன், கைத்தடியிலே ஏதோ திருகு இருக்கும்போல் தெரிகிறது; அதைக் கழற்றிக் கடிகாரங்களை நுழைத்தான். சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே துடிப்பு எனக்கு. பயல், பழி தீர்த்துக் கொள்வானே என்று வேறு பயம். துணிந்து கடமையைச் செய்வோம் என்று சொல்லிவிட்டேன்' என்று கூறினாள். மேங்காவிடம் நீ பேசினதில்லையே. மஞ்சளைக் கருப்பு என்று அவள் சொன்னால், நம்பித்தான் தீர வேண்டும்! அவ்வளவு கனிவும் குழைவும் இருக்கும். இசைபோலக் குரல்! தாளம் தவறாத பாட்டுப்போல இருக்கும் வாதங்கள்! அதிகாரி பூரித்துப்போனான்! மூன்று மாதங்களாக ஒரு பறவைகூட அவன் விரித்த வலையில் விழவில்லை. வலைவீசத் தெரியவில்லை என்று மேலதிகாரி சீறுகிறார். நல்லவேளை, ஒரு பறவை கிடைத்தது என்று எண்ணினான்; சிங்காரம் பிடிபட்டான்; சீறியதைப் பார்க்க வேண்டுமே! மேங்காவுக்கு போலீஸ் பாதுகாப்பு! போலீஸ் வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு அவளை விடுதிக்கு கொண்டு போய் விட்டுவிட்டு வணக்கம் கூறிவிட்டு வந்தார்கள் பெரிய அதிகாரிகள். பத்திரிகைக்காரர்கள் படம் எடுத்தார்களாம், புன்னகையுடன் இருங்கள் என்று கூறிவிட்டு. பைத்யக்காரர்கள்! மேங்கா எப்போதுமே புன்னகையுடன்தான் இருப்பாள்! போட்டோவுக்காகவா இருக்க வேண்டும்! அதிகாரிகள் சென்ற பிறகு, மேங்கா, தன் காலணியைக் கழற்றி, பேழையில் வைத்து எனக்கு அனுப்பிவைத்தாள். திகைக்கி-