ஏழை
147
றாய் அல்லவா. பைத்யக்காரா! மேங்காவின் காலணி சாமான்யமானது என்றா எண்ணிக் கொண்டாய்! இலட்ச ரூபாய் பெறுமானமுள்ள வைரம் அதிலே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. கள்ளக் கடத்தல்! அதற்காகவே அவள் அனுப்பி வைக்கப்பட்டாள்—என்னால், சிங்காரத்தைப் பிடித்துக் கொடுத்ததன் காரணமாக, அதிகாரியின் நல்லெண்ணத்தை-நேசத்தைப் பெறமுடிந்தது. அதனால் மேங்காவிடம் நம்பிக்கை அதிகாரிகளுக்கு. எவளைப் பிடித்து, கள்ளக் கடத்தல் வைரத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டுமோ அதே மேங்காவுக்கு போலீஸ் பாதுகாப்பு, உபசாரம்!! ஒரு இலட்சம் பெறுமானமுள்ள வைரம், காலணியில்! கடிகாரம் பறிமுதலானதால் மூவாயிரம் நஷ்டம்! இலாபம், ஒரு இலட்சம் எனக்கு! மேங்காவுக்குப் பாராட்டு, பதக்கம், பத்திரிகையில் படம்!! பார்த்தாயா நமது ஏற்பாடு, எவ்வளவு நேர்த்தியானதாக இருக்கிறது! இனியும் என்ன பயம் உனக்கு! இந்தா - இதோ, முகவரி! இது குறிச்சொல்! சரக்கு வரும், பெற்றுக்கொள். சமாராதனை நடக்கும் இடம், காய்கறிகள் தேவையல்லவா! பூசணையிலும் சுரைக்காயிலுமாக, வைரம் வைத்தனுப்பப்படும்! சங்கரமடத்துச் சாதுக்களுக்குச் சமாராதனை! என் தர்மம்! காய்கறியைப் பெற்றுக் கொண்டதும், சமையலறையில், என் ஆள், வைரத்தைப் பத்திரப்படுத்திவிடுவான்! பஜனை நடந்தபடி இருக்கும், நான் 'தரிசனம்' செய்ய வருவேன். என் கழுத்திலே உருத்திராட்சமாலைகள் போடுவார், பெரிய சாமியார்! கருப்பையன் என்று போலீஸ் ரிகார்டு! காவியுடையில், பெரியசாமியார் என்பது பெயர்! 'இந்த வேலையைச் செய்! மாதம் ஆயிரம் உனக்கு சம்பளம்' என்று கூறமாட்டேன். அன்பளிப்பு என்று வைத்துக் கொள்ளேன். நீயும், இந்த நாலு வருஷத்தில் எட்டு இடம் மாறிவிட்டாய், வேலை செய்வதில். ஒரு இடத்திலும் நிலைத்து இருப்பதில்லை என்ற கெட்ட பெயர் வேறு உனக்கு..."
"அதுமட்டுமல்ல, செல்லப்பா! நான் தொட்டது துலங்குவது இல்லை என்ற கெட்ட பெயரும் எனக்கு ஏற்பட்டுவிட்டது. எட்டு இடத்திலும் குட்டுப்பட்டு விட்டேன்."