இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
லட்சாதிபதி
159
யாருக்குத் தெரியும். இந்த வீட்டை விற்று விட்டு அவர்கள் போய் பதினைந்து நாளாயிற்று!" என்ற தகவல்தான் கிடைத்தது.
திகைத்தார் செட்டியார். எந்த இடம் சென்று அவர் அலுமேலுவைத் தேடுவார்?
இப்போது எல்லாம் செட்டியார் கடையிலே சர்க்கரை பகலில்தான் விற்கப்படுகிறது. யாராவது செட்டியாரைப் பார்த்து "உமக்கென்ன லட்சாதிபதி" என்றால் செட்டியார் புன்முறுவல் செய்வது இல்லை. "உனக்கென்னய்யா வீண் பேச்செல்லாம்? எது வேண்டுமோ கேள். தருகிறேன். வாங்கிக் கொள். போய் வா" என்று பொரிந்து தள்ளுகின்றார்.
செட்டியார் மாறிவிட்டார் என்று ஊரிலே பேசிக் கொண்டார்களே தவிர அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது...
★