16
வண்டிக்காரன்
ஒரு வாத்தியார் தேடுகிறார். படித்திருந்தால் மட்டும் போதாது; வெள்ளைக்காரரிடம் இருந்த அனுபவம் வேண்டும் என்கிறார். சம்பளம் கேட்ட அளவு. ஜெமீன் மாளிகையிலே தங்கி இருந்து, குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்."
"எனக்கு மிகவும் பிடித்தமான வேலை அப்பா அது. ஏனென்றால் நான் மேலும் படித்துக் கொள்ள வசதியாக இருக்கும்..."
"அது மட்டுமா...ஜெமீன் மாளிகையில் இருந்து வந்தால், வேறு பெரிய பெரிய வேலைகள் கிடைக்கவும் வழி சுலபத்திலே கிடைக்கும்."
"மகிழ்ச்சியாகச் சொல்ல வேண்டிய இந்த விஷயத்தை ஏனப்பா சோகத்துடன் சொல்லுகிறீர்."
"சோகமா...வேதனையே அல்லவா படுகிறேன்...இத்தனைக் காலமாகத்தான் பிரிந்திருந்தோமே—இனி ஒன்றாக இருந்து வரலாம் என்று எவ்வளவோ ஆசை—எனக்கும் உன் தாயாருக்கும்."
"ஜெமீனின் வேலை கிடைத்துவிடும் என்கிறபோது அந்த ஆசை நிறைவேறுகிறது என்றுதானே அப்பா பொருள்?"
"இல்லையடா மகனே! இல்லை. ஜெமீன் குழந்தைகளுக்கு வாத்தியாராக நீ அமர்ந்திட வேண்டுமானால் எங்களோடு இருக்க முடியாது...என் மகன் என்றுகூடச் சொல்லிக் கொள்ளக் கூடாது..."
"இது என்ன விபரீதப் பேச்சப்பா...ஜெமீன்தாரர் இதுபோல ஒரு நிபந்தனையா போட்டிருக்கிறார்?"
"இல்லை. நான்தான் நிபந்தனை போடுகிறேன். நிலைமை அப்படி. எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதுகூட ஜெமீன்தாருக்குத் தெரியாது, சொல்லவில்லை. தெரிந்தால், உன்னை வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்—'நம்ம