மகன்
23
வலி ஏற்பட்டால் அதைப் போக்க ஒரு மருந்து தெளிப்பார்கள் கண்ணில்! எரிச்சல் சொல்லி முடியாது. கண்ணீர் தாரை தாரையாகப் பெருகும். நெருப்புப் பொறி பட்டுவிட்டால் எப்படியோ அப்படி இருக்கும். கண்களே இரத்தச் சிவப்பாகிவிடும். ஆனால் தம்பி! மெள்ள மெள்ள எரிச்சல் அடங்கும். சிகப்பு மாறும். மருந்து வேலை செய்யும்; கண்வலி போய்விடும்—பார்வை முன்பு இருந்ததைவிட நன்றாக ஆகிவிடும். அப்படிப்பட்ட மருந்துத் துளிகளைத் தெளித்துக் கொண்டாக வேண்டும்—நீயும் நானும், உன் அம்மாவும்..."
"மருந்துத் துளிகள் அல்ல அப்பா! நெருப்புப் பொறிகள்!"
கடைசியில் சொக்கலிங்கம் சம்மதம் தெரிவித்தான், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
"கொஞ்ச காலம்! கொஞ்ச காலம்! வேறு ஒரு பெரிய வேலை கிடைக்கிறவரையில்!" என்று சமாதானம் கூறிவிட்டு, சடையப்பனும் சொர்ணமும் ஊர் புறப்பட்டார்கள், சொக்கலிங்கத்தை இரண்டு நாள் கழித்து ஜெமீன் கிராமம் வரும்படிச் சொல்லிவிட்டு.
டேவிட், சொக்கலிங்கம் வேறு ஊர் போவதை முதலில் விரும்பவில்லை. என்றாலும், சீக்கிரமாகவே சீமைக்கு வரும்படி அவருக்கு ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்த கடிதம் கிடைத்ததும், சொக்கலிங்கம் தன் தகப்பனாருடன் போய் வாழ்ந்து வருவதுதான் முறை என்ற முடிவுக்கு வந்தார்.
பொதுவான சிபாரிசுக் கடிதத்துடன், குறிப்பாக, ஜெமீன்தாரர் ஜம்புலிங்க பூபதிக்கே ஒரு தனியான சிபாரிசுக் கடிதமும் வாங்கிக் கொண்டு, சொக்கலிங்கம், ஜெமீன் மாளிகை நோக்கிச் சென்றான்.
அவன் படாடோபமற்ற, ஆனால் நாகரிமான உடை உடுத்திக் கொண்டு ஜெமீன் மாளிகைக்குள்ளே நுழையும்போது சடையப்பன் விலை மிகுந்த ஒரு குதிரையை வெளியே