பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகன்

39

தனியாக உலவச் செல்வதாகத் தோட்டத்துக்குச் சென்றிடும் சொக்கலிங்கத்தை ஒருமுறை தற்செயலாகப் பின் தொடர்ந்த கோகிலா, யாரும் காணாத முறையில் சொக்கலிங்கம் வண்டிக்காரன் குடிசைக்குள்ளே நுழையக் கண்டாள்.

பணியாளர்களிடம் பரிவு காட்டும் பண்பு காரணமாகவே சொக்கலிங்கம் அங்கே சென்றிருப்பதாகக் கோகிலா முதலில் எண்ணிக் கொண்டாள்.

ஆனால் உள்ளே சென்ற சொக்கலிங்கம் வெளியே வருவதற்கு நீண்ட நேரம் பிடித்தது.

அவன் வெளியே வந்தபோது, அவன் தன் கண்களிலே துளிர்த்திருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கக் கண்டாள். திகைப்பு மேலிட்டது.

கண் கலக்கத்தைத் தரத்தக்க அளவுக்கு என்ன கண்டான் அந்த குடிசைக்குள்ளே என்று எண்ணித் திகைத்தாள்.

சில விநாடிகளில் சொக்கலிங்கம் தோட்டத்தைக் கடந்து மாளிகையின் உட்புறம் சென்று விட்டான்.

அவன் உள்ளே வருவதைக் கண்டதும், உமா 'பியானோ' வாசித்துக் கொண்டு, பாட ஆரம்பித்தாள், வசந்தத்தின் இனிமையைப் பற்றிய ஒரு பாடலை.

"நோக்கம் எதுவாக இருந்தால் எனக்கென்னடா போக்கிரிப் பயலே! என்னை நம்பவைத்து மோசடி செய்தாயே, அதற்கு உன்னைச் சும்மா விட்டுவைக்கலாமா! என்னை எவ்வளவு ஏமாளி என்று எண்ணியிருந்தால், துணிந்து நீ இந்தக் காரியத்தைச் செய்திருப்பாய். அடே, அறிவற்றவனே! இந்த ஜெமீனுக்கு விரோதமாக நடந்தவன் கதி எல்லாம் தெரியுமா உனக்கு. அவர்களின் மண்டை ஓடுகள் எருவாக்கப்பட்டு வளர்ந்திருப்பதுதான் மாளிகையை ஒட்டி இருக்கிற தென்னந்தோப்பு! நீ படப்போகிறது இனி அல்லவா தெரியப் போகிறது உனக்கு. வண்டிக்காரன் பிள்ளை நீ! இங்கு வேடம் போட்டுக் கொண்டு ஜெமீன் குடும்பத்துடன் சரிசமமாகப் பழகினாயே துணிந்து, எத்-